தினமும் தக்காளி ஜுஸ் குடிச்சா உடலில் இப்படியொரு மாற்றம் கிடைக்குமா?
பொதுவாகவே தக்காளி இல்லாமல் சமையலே கிடையாது. இந்த தக்காளி சமையலுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளைக் கொடுக்கிறது.
இந்த தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மா சத்து போதுமான அளவு உள்ளது. இந்த தக்காளியை தினமும் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தக்காளியை வெறும் பழமாக சாப்பிட்டால் மட்டுமல்ல ஜுஸாக குடித்தாலும் அத்தனை நன்மைகள் இருக்கிறது.
தக்காளி ஜுஸின் நன்மைகள்
தினமும் தக்காளியை ஜுஸ் செய்து குடித்தால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும், இது செரிமானத்திற்கு உதவதோடு சீரான குடல் இயக்கத்தையும் தூண்டுகிறது
தக்காளி சாற்றில் காணப்படும் நார்ச்சத்து LDL கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) உடைக்க உதவுகிறது.
தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு ஒரு நபரின் வீக்கத்திற்கான முதன்மை அடையாளத்தை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக குறைக்கிறது
தக்காளியில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். இது எலும்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால் முகப்பருக்கள் குறைவதோடு, புற ஊதா செல் சேதம் ஏற்படாமல் தடுக்கும்.
தக்காளி சாறு உடலில் இருந்து இந்த தீங்கு விளைவிக்கும் நச்சு படிவுகளை வெளியேற்றுகிறது. தக்காளியில் குளோரின் மற்றும் சல்பர் உள்ளடக்கம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நச்சுகளை நீக்கும்.
தக்காளியில் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகிய பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்திருப்பதால், அவை உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிதைவிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |