கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் - 5 பேர் பலி
கனடாவில் சாலை விபத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் சில பேர் அண்ரு வேனில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய 5 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 5 பேரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ட்விட் செய்த கனடா இந்திய ஆணையர் அஜய் பிசாரியா, “இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
மேலும், இந்திய துணை தூதரக குழு மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
Heart-breaking tragedy in Canada: 5 Indians students passed away in an auto accident near Toronto on Saturday. Two others in hospital. Deepest condolences to the families of the victims. @IndiainToronto team in touch with friends of the victims for assistance. @MEAIndia
— Ajay Bisaria (@Ajaybis) March 14, 2022