psychology facts: நீங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மொபைல் எண்ணை வைத்திருக்கிங்களா?
பொதுவாக தற்காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் அசுரவளர்ச்சியடைந்துவிட்டன.இன்றைய காலத்தில் கைகளில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.
தகவல் தொடர்பை தாண்டி பாடல்கள் கேட்க, படம் பார்க்க, கேம்ஸ் விளையாட என ஸ்மார்ட் போனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்றைய தொழில் நுட்ப மயமான உலகில் ஸ்மார்ட் போன் இன்றி வாழ்க்கை நடத்துவதே சாத்தியமற்ற விடயமாகிவிட்டது.
அதே சமயம் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபைல் எண் தொடர்பாக பல்வேறு குற்ற செயல்கள் குறித்து அனைவருமே அறிந்திருக்க கூடும்.
மொபைல் எண்ணை ஒரு சிலர் அடிக்கடி மாற்றுவது வழக்கம். இதில் என்ன இருக்கின்றது என்று தானே சிந்திக்கின்றீர்கள்?
மொபைல் எண் மிகவும் முக்கியமான விடயம் ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மொபைல் எண்ணை பாவிப்பது சாதாரண விடயம் அல்ல, அது அவர்களின் ஒரு சில முக்கிய ஆளுமைகளை வெளிப்படுத்துகின்றது. அது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உளவியல் உண்மைகள்
ஒருவர் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலத்திற்கு வைத்திருப்பவர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
ஒரே மொபைல் எண்ணை 5 ஆண்டுகளுக்கு மேல் பாவிக்கின்றார்கள் என்றால், இவர்கள் எந்த தனிநபருக்கும் காதல் உட்பட எந்த வித துரோகங்களையும், மோசடிகளையும் செய்யவில்லை என்பதன் அடையாளமான மொபைல் எண்ணை எடுத்துக்கொள்ளலாம்.
இவர்கள் எந்தவிதமான குற்றசெயல்களிலும் ஈடுபடாமல், தொழில் மற்றும் குடும்பத்துக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருந்திருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
சிலர் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது இவர்களின் மொபைல் எண்ணையும் மாற்றிவிடுகின்றனர். ஒரே மொபைல் எண்ணை நீண்ட காலமாக வைத்து இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடனான தொடர்பை அவர்கள் மதிக்கின்றார்கள் என்று அர்த்தம்.
தங்களின் வசதியை விடவும் திறந்த தொடர்புகளுக்கு இவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்ற குணத்தை இது பிரதிபளிக்கின்றது.
மேலும், ஒரு நபர் ஒரே எண்ணை நீண்ட காலமாக வைத்து இருப்பது அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றது. இப்படிப்பட்டவர்களுக்கு கடன் கொடுக்கவோ, அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் தொழில் செய்யவோ மற்றவர்கள் விரும்புவார்கள்.
தற்காலத்தில் மொபைல் எண்ணை மாற்றுவது ஒன்றும் கடினமான விடயம் கிடையாது. எளிதாக எத்தனை புதிய சிம் வேண்டுமானாலும் வாங்கி கொள்ள முடியும்.
இருப்பினும் ஒருவர் தொடர்ந்து ஒரே மொபைல் எண்ணை வைத்திருப்பது வெறும் தனிப்பட்ட விருப்பம் அல்ல அது அவர்களிள் நேர்மையின் அடையாளமாக பார்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |