வீ்ட்டுக்குள்ளேயும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்...தவறில்லை!
சன்ஸ்க்ரீன் என்னபது சருமத்தை சூரிய கதிர்வீச்சுக்களிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றது. இதை வெயில் காலங்களில் வெளியில் செல்லும்போது சருமத்துக்கு பயன்படுத்துவர்.
ஆனால், இதை வெளியில் செல்லும்போது மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிலிருக்கும்போதும் பயன்படுத்தலாம்.
image - be beautiful
சரி இனி வீட்டில் இருக்கும்போது சன்ஸ்க்ரீனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்...
சருமத்தை பாதுகாக்கும் - நவீன ரகத்தில் தயாராகும் சன்ஸ்க்ரீன்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது.
வயது முதிர்ச்சி - சன்ஸ்க்ரீனில் எஸ்.பி.எப் 30க்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இது வயது முதிர்ச்சியை தடுக்கும்.
image - cosmo.ph
நீல ஒளி - எலெக்ட்ரிக் சாதனங்களான, கணினிகள், டேப்லேட்டுகள், ஸ்மார்ட் போன்கள் என்பவற்றிலிருந்து வெளியாகும் நீலி ஒளியின் வீரியத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
புற்றுநோய் அபாயம் - சூரியனால் உமிழப்படும் புற ஊதாக் கதிர்வீச்சுக்களின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும். அது சருமத்தை பாதிப்படையச் செய்யலாம். எனவே சன்ஸ்க்ரீனை உபயோகப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம்.