ஆப்பிள் போல் சிவந்த சருமத்துக்கு...அப்பிள் ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!
பொதுவாக பழங்கள் என்றாலே அதில் அதிகளவு விட்டமின்கள் இருப்பது உண்மை. விட்டமின்கள் உடல் நலனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
இது உடல் நலனுக்கு மட்டுமில்லாமல் சருமத்துக்கும் மிகவும் நல்லது. ஆப்பிளானது கொலாஜன் உற்பத்திக்கு உதவி செய்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மைக்கு உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஆப்பிளில் உள்ள விட்டமின் ஏ சருமத்தை புற்றுநோய் செல்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது.
மேலும் சருமத்தை தாக்கும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பளிக்கும். சருமத்தின் மென்மைத் தன்மையை பாதுகாக்கும். சருமத்தில் உள்ள சோர்வை நீக்கி, புத்துயிர் அளிக்க இந்த மாஸ்க்கை பயன்படுத்தினால் நல்லது.
image - maharashtra times
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
தண்ணீர் - 1 கப்
செய்முறை
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும்.
வெட்டிய ஆப்பிளை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் நன்கு ஊறவைத்து, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
image - medylife
தேவையான பொருட்கள்
1 ஆப்பிள் தோல்
1 தேக்கரண்டி தேன்
செய்முறை
முதலில் ஆப்பிளின் தோலை மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊறவிட வேண்டும்.
பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.