கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?
பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும்.
அதே போன்று திருமண ஜோடிகளின் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் பிரச்சினையா? எவ்வளவு வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதனை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வயது வித்தியாசம்
அதாவது தம்பதிகளுக்கு இடையே 2 முதல் 4 வயது வித்தியாசம் காணப்பட்டால் ஒரு புரிந்து கொள்ளுதல் இருக்கும். ஆனால் 7 அல்லது 10 வயது வித்தியாசம் காணப்பட்டால் இருவரின் ரசனை வித்தியாசமாக இருப்பதால், இதுவே பிரச்சினைக்கு காரணமாகவும் அமைகின்றது.
தம்பதிகளுக்குள் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் காணப்பட்டால், வயது முதிர்ச்சியாக இருக்கும் நபர் பிரச்சினைகளை சரியாக தீர்த்து வாழ்க்கையை பிரிவு இல்லாமல் கொண்டு செல்வார்களாம்.
அதுவே 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் என்றால், எதார்த்தமான வாழ்க்கையில் வேறுபாடுகள் அதிகமாக காணப்படும். சில தருணங்களில் இருவரின் தோற்றம் பிரிவை கூட ஏற்படுத்தலாம். இருவரின் கருத்துக்கள், லட்சியம், இலக்கு இவை எல்லாவற்றிலும் வேறுபாடு ஏற்படும்.
மேலும் இவ்வாறு வயது வித்தியாசம் காணப்படும் போது குழந்தைகளை பெறுவதற்கு காலம் தாமதியாமல் முடிவுகளை இவர்கள் எடுக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகள் இருக்கலாம்
10 வயதுக்கு மேல் வயது வித்தியாசம் இருந்தாலே அவர்களுக்குள் தலைமுறை இடைவெளி வந்துவிடும். இதனால் பிரச்சனைகள் தலைதூக்கும்.
ஆய்வுகளின்படி, ஒரே வயது அல்லது 2 முதல் 3 வயது வித்தியாசம் கணவனுக்கு மனைவிக்கும் இருப்பது நல்லது.
அதிகபட்சமாக 5 அல்லது 6 வயது வித்தியாசம் இருந்தால் நல்லது என ஆய்வுகள் சொல்கின்றன.