கண்களில் தோன்றும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? இதை மட்டும் பின்பற்றுங்கள்!

eyeblack Removesteps
By Rooban Jul 05, 2021 09:01 PM GMT
Rooban

Rooban

Report

 கண்களுக்கு அடியில் தோன்றும் கருவளையங்கள் சோர்வையும், மந்தமான உணர்வையும் மட்டும் தோற்றுவிப்பதில்லை.

மேலும், சருமத்தின் இயற்கையான அழகையும் பாழ்படுத்திவிடும். கருவளையம் படர்ந்த பின்னர்தான் அதனை போக்குவதற்கான தேடுகிறோம்.

ஒரு சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றினாலே கருவளைய பாதிப்பு நேராமல் நிரந்தரமாக தற்காத்துக்கொள்ளலாம்.

நீர்ச்சத்து

தினசரி போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கருவளைய பாதிப்பையும் தவிர்த்துவிடலாம்.

தினமும் குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுத்துவிடும்.

மேலும், தண்ணீர் அதிகம் பருகுவது கண்களில் படிந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். கண் பகுதியில் சூழ்ந்திருக்கும் உப்பு செறிவின் அளவும் குறையும். அதனால் கருவளையம் எட்டிப்பார்க்காது.

வைட்டமின்கள்

கொலாஜன் அளவு குறைவது கருவளையங்கள் தோன்றுவதற்கான மற்றொரு காரணமாகும். கண்களின் அடிப்புற இமை பகுதியில் வீக்கம் தோன்றுவதற்கும் வழிவகுத்துவிடும்.

கொலாஜன் அமினோ அமிலங்களால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். வைட்டமின் ஏ, அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது.

இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நிறமிகளின் செயல்பாடுகளை குறைக்கும் திறன் கொண்டது. அதன் காரணமாக கருவளையம் தோன்றுவது கட்டுப்படுத்தப்படும்.

ரத்த ஓட்டம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தின் பளபளப்பு தன்மையை மீட்டெடுப்பதற்கும், கருவளையங்களை குறைப்பதற்கும் வைட்டமின் சி உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரியான தூக்கம்

சரியான தூக்க சுழற்சி அழகை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தூங்கும்போது சருமம் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள தொடங்கிவிடும். புதிய செல்களை உருவாக்குவதுடன் ஆக்சிஜன் சுழற்சிக்கும் வழிவகை செய்யும்.

போதுமான தூக்கம் இல்லாதபோது சருமம் தன்னை புதுப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். ஆக்சிஜன் சுழற்சியும் குறைந்துவிடும்.

அதன் காரணமாக கண்களுக்கு அடிப்பகுதியில் இருக்கும் மென்மையான தன்மை கொண்ட சரும அடுக்கில் ரத்த ஓட்டத்தின் அளவு மாறுபடும். அந்த பகுதியில் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தம் அதிகமாகத் தெரியும். அவை கருவளைய வட்டங்கள் தோன்றுவதற்கு காரணமாகிவிடும்.

சன்ஸ் கிரீன்

வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெளியே சென்றாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் சாதனங்கள், கணினிகள், டி.வி.களில் இருந்து நீல ஒளி கதிர்களும் சருமத்தை சேதப்படுத்துகின்றன.

இதனால், புற ஊதாக்கதிர்கள் வயதான அறிகுறிகளை தோற்றுவித்துவிடும். சருமம் நெகிழ்வு தன்மையை இழந்து சுருக்கங்கள் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

மெலனின் என்பது சரும நிறம், கண், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கை நிறமியாகும். உடலில் இருக்கும் மெலனின் அளவு சருமத்தின் நிறத்தை தீர்மானிக்கும். சூரிய கதிர்கள் மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு, மெலனின் அளவை அதிகரிப்பதால் மென்மையான உணர்திறன் கொண்ட சருமம் பாதிப்புக்குள்ளாகும்.

கிரீம்

கருவளையத்தை போக்குவதற்கு கிரீம்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அத்தகைய கிரீம்களில் வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் இருக்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே கிரீம்கள் பயன்படுத்துவதன் மூலம் கருவளைய பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US