குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் டிப்ஸ் ஆ? தெரிஞ்சுக்கோங்க
குழந்தைகளக்கு நினைவாற்றல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைவாக இருந்தால் அவர்கள் பாடசாலையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்
குழந்தைகளுக்கு நினைவாற்றலை மிகைப்படுத்துவதற்கான சில வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.
அந்த வகையில் பொதுவாக கீழ் குறிப்பிடும் நலன்களை எல்லா குழந்தைகளுக்கும் நாம் செய்வது நல்லது.
விளையாட்டுக்கள்
குழந்தைகளை ஒரு இடத்தில் அடைத்து வைக்காமல் அவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும். ஒருவரின் நினைவாற்றல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கு சவாலான கேம்களை கொடுங்கள். சுயமாக விளையாடக்கூடிய கேம்களில் ஊக்கப்டுத்துங்கள்.
அவ்வாறு செயற்படுத்துவதால் அவர்களின் நினைவாற்றல் தசைகளுக்குப் பயிற்சி அளித்து, எல்லா வகையான விஷயங்களையும் தகவலையும் சரியாக நினைவுப்படுத்த உதவும்.
மன அழுத்தம்
குழந்தைகள் தங்களின் பாடங்களை புரிந்துகொண்டு தாமாக செயற்பட நாம் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் புதிதான விடயங்களை கற்றுக்கொள்ளும் போது அவர்களை நாம் தடுக்கக் கூடாது.
அதை செய்வதற்கு நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு பிடித்த விடயத்தில் அவர்கள் ஈடுபடும் போது அவர்களுக்கு கற்றல் விடயங்கள் மறக்காது.
தூக்கம்
குழந்தைகளை ஒவ்வொரு நாளும் குறைந்நது 8-10 மணிநேர ஆழ்ந்த தூக்கத்தை அவர்களுக்கு நாம் கொடுப்பது அவசியம். மேலும் அவர்களை சரியான நேரத்தில் படுக்கைக்கு அனுப்பி பழக்க வேண்டும். இதனால் காலையில் அவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது சரியான முறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் வைட்டமின்கள், ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புத்துணர்ச்சி தரும் பானங்களையும் கொடுக்கலாம். குழந்தைகள் நாள் முழுவதும் ஏதாவது சுட்டி தனத்துடன் செயற்படுவார்கள். இவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுக்க வேண்டும்.
இதனால் அவர்களின் உணவில் பாதாம், நிலக்கடலை, பிஸ்தா மற்றும் முந்திரி ஆகிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் வகை உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இது போன்ற போன்ற விதைகள் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது.
முட்டை
முட்டையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் டிஹெச்ஏ போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
இது நம் மூளைக்கு மிகவும் அவசியமான சத்தாகும். இந்த உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை மேம்படுத்தி, ஒருவரின் கற்றல் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |