வாழ்நாள் முழுதும் இந்த பொடி போதும்! உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடே வராது
வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடிய கால் வலி, மூட்டு வலி இப்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் உடல் அளவில் வேலை செய்வது குறைவு மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதே, இருப்பினும் இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு .
இவ்வாறான பிரச்சனைகள் கால்சியம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் வரலாம். இந்த கால்சியம் இரும்புச்சத்து குறைபாடுகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கால்சியம் மற்றும் இரும்புச்சத்து பொடி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ஜவ்வாரிசைியை 100 கிராம் அளவில் எடுத்து அதை நன்றாக குறைவான நெருப்பில் வறுக்க வேண்டும்.
பின்னர் கறுப்பு எள் 100 கிராம் எடுத்து அதையும் நன்றாக வறுக்க வேண்டும், தொடர்ந்து கருப்பு உளுந்து 200 கிராம் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் பார்லியை 3 நிமிடம் வறுத்து எடுக்க வேண்டும், பார்லியில் அதிகளவு சுண்ணாம்பு சத்து உள்ளதால் இது எலும்புகளின் தேய்மானத்தில் இருந்து பாதுகாக்கும்.
பின்னர் அதனுடன் ஏலக்காயை வாசனைக்காக சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அவை எல்லாவற்றையும் ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு காய்ந்த தண்ணீர் அற்ற மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் சுக்குப்பொடி சேர்க்க வேண்டும்.
இதில் உளுந்து சேர்த்திருக்கின்றமையினால் வாயுப்பிரச்சனை இருக்கும், இதனால் தான் இதில் சுக்குப்பொடி சேர்க்க வேண்டும்.
இந்த கலவை எல்லாவற்றையும் ஒரு கண்ணாடி பொத்தலில் அடைத்து ஒருமாதத்திற்கு வைத்து கொள்ளலாம்.
செய்யும் முறை
இந்த கலவையை தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிளாஸ் பாலை கொதிக்க விட்டு அந்த பாலில் கரைத்து வைத்த அந்ந கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கெட்டியாக வரும் வரை நன்றாக கலக்க வேண்டும்.
கொஞ்சம் கெட்டியாகி வரும்போது எடுத்து நாட்டுச்சர்க்கரை கலந்து பருகலாம்.
வெள்ளை சக்கரையை தவிர வெல்லத்தையும் எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு பாலில் உண்ண விரும்பாதவர்கள் தண்ணீரிலும் சேர்த்து செய்து பருகலாம். ஆனால் பாலில் சேர்த்து பருகினால் அதிகமான பலன் கிடைக்கும்.
இந்த உணவை காலை மற்றும் மாலை வேளைகளில் காபி, டீ-க்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். இதை ஒவ்வொரு நாளும் எடுத்து கொண்டால் கை-கால் வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் இருக்காது.
உடல் சோர்வு இருக்காது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்காது.
இந்த உணவை பூப்பெய்திய பெண்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் சீராக இருக்கும்.
இந்தப்பாலை தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் உங்களால் சிறந்த பலனை அனுபவிக்க முடியும்.
பெண்களுக்கான கர்ப்பபை பிரச்சனைகளுக்கு இந்தப்பானம் பெரும் உதவியாக இருக்கும். இதை உண்பதால் வாழ்நாள் முழுவதும் இடுப்பு வலி மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது.