ஜிம் போகாமல் வீட்டில் இருந்தே எடையை குறைக்கலாமா? உடற்பயிற்சி ஆலோசகரின் கருத்து
ஜிம் அல்லது கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், குஜராத் தொழிலதிபர் ஒருவர் 10 மாதங்களில் 23 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளார்.
எடை குறைப்பு
குஜராத் தொழிலதிபர் 10 மாதங்களுக்கு முன்பு சுமார் 92 கிலோ எடை இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் உடற்பயிற்சி ஆலாசகர் ஒருவரை சந்தித்து எடை கறைக்க முடிவு செய்துள்ளார்.
ஆனால் இவர் ஒரு பிஸியான நபர் என்பதால், அவருக்கு ஆரம்பத்தில் வடிவமைத்துக் கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை சரியாக பின்பற்ற முடியவில்லை. எனவே, நாள்தோறும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், எங்கு சென்றாலும், காரில் வருவதும் போவதுமாக இருந்த தொழிலதிபர் நிராஜுக்கு இது ஆரம்பத்தில் சரிவரவில்லை. ஆனால், தனது அன்றாட வேலைகளில் அதைப் பழக்கப்படுத்திக் கொண்டார்.
அதன்பிறகு, சிறிய டம்பிள்ஸ் வாங்கச் சொல்லி, அதை வைத்து சிறிது நேரத்திற்கு சாதாரண உடற்பயிற்சிகளை வடிவமைத்துக் கொடுத்தார்.
அத்துடன் வீட்டில் சமைக்கும் உணவுகளோடு, பனீர், சோயா, மோர் மற்றும் பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை பயன்படுத்தவும், சர்க்கரை அளவை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டெப்ஸ் நடந்த தொழிலதிபர் நிராஜ், உணவையும் சரியாக பின்பற்றியுள்ளார்.
இதனால், அவரது எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, 10 மாதங்களில் 23 கிலோ வரை எடை குறைந்ததாக, உடற்பயிற்சி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
No gym, No fancy food.
— Satej Gohel (@SatejGohel) June 21, 2024
A Gujarati businessman eating Gujarati homemade food and home workouts led to this transformation!
This is how we were able to achieve Niraj's transformation ?.
Save this Thread. pic.twitter.com/seJXAw2Hzw
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |