Fingerprint Unlock: இறந்தவரின் விரலால் போனை திறக்க முடியுமா? இது தெரியாமல் இருக்காதீங்க
தற்போது புதிதாக வெளியில் வரும் ஸ்மார்ட் போன்கள் Fingerprint sensor உடன் தான் வருகிறது.
பயனரின் கைரேகையை பயன்படுத்தி ஒரு உயிரியல் (biometric) சாதனமாக இது பார்க்கப்படுகிறது.
இது ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களில் பயன்படுத்தப்படும். இந்த Fingerprint sensor பொருத்தப்பட்டிருக்கும் சாதனத்தை அன்லாக் செய்தல், பரிவர்த்தனைகளை உறுதி செய்தல் போன்றவற்றை செய்ய முடியும்.
சில முறைபாடுகளில் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் இறந்து விட்டால் அவர் பயன்படுத்திய போன்கள் மற்றும் கணனிகளை unlock செய்வது கடினமாக இருக்கும்.
குறித்த நபர் இறந்த பின்னரும் Fingerprint sensor-ஆல் கைரேகை பயன்படுத்தி தொலைபேசியை திறக்க முடியுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

அந்த வகையில், ஒருவர் இறந்த பின்னரும் Fingerprint sensor வேலை செய்யுமா? என்பதற்கான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
Fingerprint sensor வேலை செய்யுமா?
கைரேகை சென்சார்கள் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். இதனால் ஒரு நபரின் கைரேகை தனித்துவத்தை கண்டுபிடித்து விடும். வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான ரேகை அமைப்பை கொண்டிருப்பவர்கள் இலகுவில் அடையாளம் காணலாம்.
சென்சார், நம் கைரேகையின் டிஜிட்டல் படத்தை உருவாக்கி பாதுகாப்பான தரவாக வைத்துக் கொள்ளும். இதன் காரணமாகமே போன் கையை வைத்தவுடன் அன்லாக் செய்யப்படுகிறது.

ஆப்டிகல், கொள்ளளவு (capacitive) மற்றும் அல்ட்ராசோனிக் என ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1. ஆப்டிகல் சென்சார்
ஆப்டிகல் சென்சாரானது புகைப்படத்தைப் பயன்படுத்தி கைரேகையை படம் எடுத்து வைத்து கொள்கிறது.
2. capacitive சென்சார்
capacitive சென்சார் என்பது கைரேகையில் இருக்கும் பள்ளம் மற்றும் மேடுகளை மின்னணு சமிக்ஞைகளை உருவாக்கும்.
3. அல்ட்ராசோனிக் சென்சார்
அல்ட்ராசோனிக் சென்சார் என்பது ஒலி அலைகளைப் பயன்படுத்தி கைரேகையின் முப்பரிமாணப் படத்தை உருவாக்கி வைத்துக் கொள்ளும்.
அதே போன்று பயனரின் 'உயிர் கண்டறிதல்' (liveness detection) பயன்படுத்தி இனங்காணும்.

உதாரணமாக வியர்வை, ரத்த ஓட்டம், வெப்பநிலை அல்லது தோல் நுண் கட்டமைப்பு போன்றவற்றை கூறலாம். ஒருவரின் விரல் வியர்வை அல்லது இரத்தத்தை உற்பத்தி செய்யவில்லை என்றாலும் சென்சார் வேலைச் செய்யாமல் போக வாய்ப்பு உள்ளது.
இறந்த ஒருவரின் விரலை வைத்து அவருடைய தொலைபேசி அன்லாக் செய்ய முடியாது. அவர் இறந்து எவ்வளவு நேரத்தை அடிப்படையாக வைத்து முயற்சித்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |