மலத்தை கட்டுப்படுத்தினால் மாரடைப்பு வருமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்
பொதுவாகவே பெரும்பாவானவர்கள் வீட்டு சூழலில் தான் மலம் கழிக்க விரும்புவார்கள். சௌகரியம் மற்றும் சுகாததாரம் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு விரும்பப்படுகின்றது.
ஆனால் நாம் தொழில் புரியும் இடங்களிலோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் போதோ மலம் கழிக்க வேண்டிய தோவை ஏற்படும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மலத்தை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து
காலையில் எழுந்தவுமன் சிலருக்கு மலம் கழிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களின் உடல் அதற்கு பழக்கப்பட்டிருந்தால் பிரச்சினை இல்லை ஆனால் சிலர் வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காக மலம் கழிக்க தோன்றவிட்டாலும், மலத்தை வெளியேற்ற முயற்சிப்பார்கள் இது முற்றிலும் தவறு.
இயற்கை அழைப்பை புறக்கணித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் குடலை சுத்தம் செய்ய முயற்சிப்பதும் மலம் கழக்க வேண்டிய நேரத்தில் மலத்தை கட்டுபடுத்துவதும் ஆபத்தானது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மலத்தை கட்டுப்படுத்துவதால் வயிற்று உப்புசம், வயிறு நிரம்பிய உணர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
மேலும் மலத்தைக் கட்டுப்படுத்தவது மலக்குடல் விரிசலுக்கு வழிவகுக்கும். பெருங்குடலின் கீழ் முனைப்பகுதி தான் மலக்குடல் அதாவது ஆசனவாய் காணப்படுகின்றது.
மலக்குடலில் இறுக்கமான மலம் வெளியேறும் போது, அந்த குடலில் விரிசல் ஏற்படும். ஒருவர் இயற்கை அழைப்பின் போது மலத்தை வெளியேற்றாமல், தானாக முயற்சித்து பெருங்குடலில் உள்ள தசைகளை பயன்படுத்தி மலத்தை வெளியேற்றும் போதே இந்த நிலை ஏற்படுகின்றது.
இவ்வாறு மலத்தை கட்டுபடுத்துவதை வழக்கமாக வைத்திருந்தால், அது மலம் அடங்காமையை ஏற்படுத்தும் அதாவது எந்த சூழ்நிலையிலும் மலத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நிரந்தரமாக ஏற்பட்டுவிடும்.
மலத்தை கட்டுப்படுத்துவது அது மலச்சிக்கலை தோற்றுவிக்கும். இதனால் மலம் இறுக்கமாகும். இறுக்கமான மலத்தை வெளியேற்ற அதிகமாக ஒருவர் முக்கும் போது, அதன் விளைவாக பைல்ஸ் பிரச்சினை ஏற்படுகின்றது.
நாள்பட்ட மலச்சிக்கல் இரத்த அழுத்தத்தை உயர்த்தி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் அறியப்படுகின்றது. 27 சதவீத இதயநோயின் அபாயம் மலத்தை அடக்குவதன் விளைவாக அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |