அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த Problem வரலாம்- எச்சரிக்கை
பொதுவாக இந்தியர்கள் பலரும் காலை எழுந்தவுடன் டீ குடிக்க தான் விரும்புவார்கள்.
இது அவர்களுக்கு காதல் போன்றது. இன்னும் சிலருக்கோ இது ஒரு ஆற்றல் மேம்படுத்தும் பானமாக பார்க்கிறார்கள்.
ஒரு கப் டீ அவர்களின் மனநிலை கோளாறுகள் சரிச் செய்யும் பானமாகவும், பசியை போக்கும் பானமாகவும் நினைத்து தினம் தினம் குடிக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தினமும் டீ குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? என பலருக்கும் சந்தேகம் வரும்.
இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்த நிபுணர், “ டீ-யில் உடல் எடையை அதிகரிப்பதற்கு என ஏதுமில்லை. ஆனால் டீயை நீங்கள் எப்படி குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உடல் எடையில் மாற்றம் ஏற்படும்..” என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தினமும் டீ குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?
1. டீயில் கொழுப்பு செல்களை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் பண்பு உள்ளது. இது டீயை விட காஃபி தான் அதிகம் உள்ளது. இது உங்களின் ஆற்றலை அதிகப்படுத்துவதுடன் சேர்மங்கள் குடலால் உறிஞ்சப்படும் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.
2. மற்ற பானங்களிலும் பார்க்க டீயில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உடல் எடையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாறாக சில சமயங்களில் இதனால் கூட எடை அதிகரிக்கலாம்.
3. டீயில் சர்க்கரை சேர்க்கப்படும் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அளவாக சர்க்கரை போடுதல் அல்லது சர்க்கரை இல்லாமல் டீ குடித்தால் இப்படியான சிக்கல்கள் வராமல் தடுக்கலாம்.
4. சிலர் பிஸ்கட், ஸ்நாக்ஸ் இல்லாமல் டீ குடிக்க விரும்பமாட்டார்கள். டீயுடன் இப்படியான இனிப்புக்கள் மற்றும் எண்ணெய் அதிகம் போட்டு தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ்களால் எடை அதிகரிப்பு ஏற்படலாம். முடிந்தவரை டீ மாத்திரம் தனியாக அருந்த முயற்சி செய்யுங்கள்.
5. சிலர் சாப்பிட்ட பிறகு டீ குடிப்பார்கள். இதனால் கலோரிகளின் நுகர்வு அதிகரித்து ஊட்டச்சத்து உறிஞ்சுவது குறையும். இதனால் கூட எடை அதிகரிப்பு ஏற்படலாம். என்வே சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் டீ அருந்துவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
டீயை எப்படி குடித்தால் எடை அதிகரிக்காது?
- டீ போடும் போது அதில் கிராம்பு, ஏலக்காய், துளசி அல்லது அதிமதுரம் ஆகிய மூலிகைளை சேர்த்து கொண்டால் எடை அதிகரிக்காது.
- டீயுடன் பால் சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலை கலந்து டீ போட்டால் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
- குறைந்தளவு சர்க்கரை போட்டு கொள்வது சிறந்தது. இதனால் எடையை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
- அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் டீயை நீண்ட நேரம் கொதிக்க விடாமல் இறக்கவும். .