நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைக்காய் அளிக்கும் நன்மைகள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சர்க்கரை நோயாளிகள் வாழைக்காயை எடுத்துக்கொண்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
வாழைக்காய்
வாழைக்காயில் மாவுச்சத்து அதிகமாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும், ஸ்டார்ச் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்க பெரிதும் உதவும் வாழைக்காயை அளவோடு சாப்பிட வேண்டுமாம்.
தற்போது சர்க்கரை நோயாளிகள் வாழைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நன்மைகள் என்ன?
வாழைக்காயில் உள்ள கிளசமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம், ஆனால் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை A1C பரிசோதனை செய்து டயட் முறையை குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
வாழைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானத்திற்கு நன்மை பயக்குவதுடன், மலச்சிக்கல் தடுக்கப்படுகின்றது. மேலும் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் அதிகமாக வரும் நிலையில், வாழைக்காயினை உணவில் சேர்த்துக் கொண்டால் சுலபமாக தடுக்க முடியும்.
உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் வாழைக்காய் உதவுவதுடன், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளும் குறையுமாம்.
வாழைக்காயில் உள்ள ஃப்ரீ டயாபடிக்ஸ் குடல் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராமலும் தடுக்கின்றது.
வாழைக்காயில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி சர்க்கரை நோயாளிகளின் உடம்புக்கு ரொம்பவே நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பக்க விளைவுகள் உண்டா?
சர்க்கரை நோயாளிகளுக்கு வாழக்காய் நல்லது என்றாலும், அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் அளவோடு சாப்பிடவும்.
அதுமட்டுமின்றி அதில் கலோரிகள் நிறைந்துள்ளதால் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்வதால் நன்மைகள் அதிகமாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |