சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் ‘பழங்களின் அரசன்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது.
100 கிராம் மாம்பழத்தில் சுமார் 60 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவ சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து மற்றும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன.
கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) மதிப்பு 51 என்ற குறைந்த அளவில் இருப்பதால், இதன் உணவில் கலந்து கொள்வது முற்றிலும் தவறல்ல.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
ஆனால் சர்க்கரை அளவு உயரும் அபாயம் ஏற்படும். ஆகையால் மிகவும் பழுத்த மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த GI உள்ள பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஜூஸாக குடிக்காமல், முழுப் பழமாகவே எடுத்துக்கொள்வதே சிறந்தது.
சரியான நேரங்களில், குறிப்பாக காலை 11 மணியோ அல்லது மாலை நேரத்திலோ, ஒரு சிறிய அளவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்வது ஏற்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |