இந்த பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை சாப்பிடக்கூடாதாம்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க
வேர்க்காய்கறிகளில் பீட்ரூட் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
குறிப்பாக, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
இருந்தாலும், குறிப்பிட்ட சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பீட்ரூட் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்வர்கள் பீட்ரூட்டை அதிகமாக உட்கொண்டால், பீட்ரூட்டில் காணப்படும் ஆக்சலேட் அளவிற்கு அதிகமானால் சிறுநீரக கற்கள் உருவாகும்.
குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் மேலும் இரத்த அழுத்தம் குறையும்.
சளி மற்றும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலின் குளிர்ச்சியை மேலும், அதிகரித்து இருமல் பிரச்சனை ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட்டை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
மேலும், அலர்ஜி இருப்பவர்கள் பீட்ரூட்டை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால் சருமத்தில் அரிப்பு மற்றும் வெடிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
