நீரிழிவு நோய் இருந்தால் தயிர் சாப்பிடலாமா? உணவியல் நிபுணர் விளக்கம்
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அந்த வகையில் இவர்கள் தயிர் சாப்பிடலாமா என்பதை பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மிகச்சிறிய கவனக்குறைவு அல்லது யோசிக்காமல் சாப்பிடுவது கூட இரத்த சர்க்கரையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் அனைவரும் தயிர் சாப்பிடுவதை அதிகரித்துள்ளனர்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் தயிர் உட்கொள்ளலாமா, வேண்டாமா? தயிர் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? என பல கேள்விகளுக்கு தற்போது உணவு நிபுணரின் விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் தயிர் சாப்பிடலாமா?
உணவியல் நிபுணர் ஸ்வாதி சிங், கூறும் போது தயிரில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) இருப்பதால், அது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார்.
தயிர் ஒரு ஆரோக்கியமான உணவு, இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளன.
தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவு.
மேலும் தயிர் ஒரு இயற்கையான புரோபயாடிக் ஆகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தயிர் சாப்பிடலாம்.

தயிர் சாப்பிட சிறந்த நேரம் எது?
ஆயுர்வேதத்தில், இரவில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. இது சளி உற்பத்தியாகும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.
வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடும்போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகிறது. இது தயிரில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்களைக் கொன்று, அமிலத்தன்மையை அதிகரிக்கிறது.
எனவே, வெறும் வயிற்றிலோ அல்லது நள்ளிரவிலோ தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பகல் நேரங்களில் உணவோடு தயிர் சாப்பிடுவது நன்மை தரும்.

நீரிழிவு நோயாளர் தயிர் சாப்பிடுவது எப்படி?
தயிர் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது. எனவே நீரிழிவு நோயாளிகள் புதிய, இனிப்பு சேர்க்காத தயிரை உட்கொள்ள வேண்டும்.
அதிலிருந்து மோர் தயாரித்தும் பருகலாம். ஆயுர்வேதத்தில் தயிரில் இனிப்பு சேர்ப்பது நன்மை பயக்கும் என்று கருதப்பட்டாலும், நீரிழிவு நோயாளிகள் இந்த வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |