இனி சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இதுக்கு No சொல்லுங்க.. மருத்துவர் எச்சரிக்கை!
பொதுவாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு எடுத்துக் கொள்ளும் கூடுதல் கவனம் வைத்திருக்க வேண்டும்.
என்ன உணவு, எந்த அளவு என்பதில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உலர் பழங்கள் சாப்பிடும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்தாலும் சர்க்கரை நோயாளிகள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறார்கள்.
அப்படியாயின், சர்க்கரை வியாதியுள்ளவர்கள் என்னென்ன உலர் பழங்கள் சாப்பிடக் கூடாது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உலர் பழங்கள் சாப்பிடலாமா?
பழங்களை விட நீர்ச்சத்து நீக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட பழங்களையே உலர் பழங்கள் என அழைக்கிறார்கள். அதிர் நீர்ச்சத்து நீக்கப்படும் பொழுது பழத்திலுள்ள இயல்பான சர்க்கரை சத்துக்களான ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்றவை உயரும்.
நீரிழிவு நோயாளிகள் அளவு அறியாமல் அதிகமாக உட்க் கொண்டால் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு உயர வாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, பாதாம், நட்ஸ், முந்திரி போன்ற உலர் பழங்களில் புரதம் அதிகமாக இருக்கும். நார்ச்சத்துக்களும் அதிகமாக இருப்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். இதய ஆரோக்கியம், உடல் எடை சீராக்குதல் போன்ற பல நன்மைகளை இதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அதே போன்று பேரிச்சம்பழம், உலர வைக்கப்பட்ட வாழைப்பழம், மாம்பழம், செர்ரி போன்ற பழங்கள் சர்க்கரை நோயாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். முடிந்தவரை இது போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது.
அமெரிக்க நீரிழிவு அமைப்பின் கூற்றுப்படி, சர்க்கரைச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள உலர் பழங்கள் தான் ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவிச் செய்யும். உதாரணமாக பாதாம், முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றை கூறலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புச்சத்துக்கள் தேவை. ஆனாலும் ஒரு நாளுக்கு கைபிடி அளவு மாத்திரம் தான் உலர் பழங்கள் சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |