மழைக்காலம் என்றாலே முழங்கால் வலியா?அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க - உங்க பக்கம் கூட வராது!
பொதுவாக மழைக்காலம் வந்து விட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் அடிக்கடி வரும்.
இதனால் வாதம், கால்வலி என பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை தொடர்ந்து இது போன்ற பிரச்சினைகளை மருந்துகளில் கட்டுபடுத்துவதை விட உணவுகளினால் கட்டுபடுத்தினால் தீர்வு நிரந்தரமாக இருக்கும்.
அந்த வகையில் மழைக்காலங்களில் திடீரென தோன்றும் கால்சியம் குறைபாட்டு பிரச்சினையை கட்டுபடுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மழைக்காலங்களில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
1. மழைக்காலம் வந்து விட்டால் பால் உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். இது வைட்டமின் D, கால்சியம் மற்றும் புரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. அதாவது பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களை குறிப்பிடலாம்.
2. கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகமான கால்சியம் இருக்கின்றன. இது எலும்புகளை வலுப்படுத்தி எலும்புக்ள தொடர்பான பிரச்சினைகளை சரிச் செய்கின்றன. அத்துடன் வைட்டமின் K சத்தும் அதிகமாக இருக்கின்றது.
3. கடலுணவுகளில் சால்மன் மீனில் தான் அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆகவே இது போன்ற நேரங்களில் சால்மீன் எடுத்து கொள்வது சிறந்தது.
4. எலும்புகள் ஆரோக்கியத்தில் பாதாமிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. இதனால் மழைக்காலங்களில் பாதாம் சாப்பிடலாம். இதிலுள்ள மெக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் E ஊட்டசத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றது. மாலை நேரங்களில் ஸ்நாக்ஸாக இதனை எடுத்து கொள்ளலாம்.
5. அசைவ உணவு பிரியர்கள் டோஃபு எடுத்து கொள்ளலாம். ஏனெனின் இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புக்களை வலுப்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |