முதுகு வலி, பல்வலி, மூட்டு பிரச்சனை வராமல் காக்கும் உணவுகள்.. இதில் கால்சியம் உள்ளதா?
பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் கட்டுகோப்பாக பாதுகாக்கவும் கால்சியம் சத்து தேவைப்படுகின்றது.
அத்துடன் எலும்பு வளர்ச்சி பெறுவதற்கும் அதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கவும் கால்சியம் சத்து அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
கால்சியம் சத்து என பார்க்கும் பொழுது அநேகமானவர்கள் பால் அருந்துவார்கள்.
இவற்றையும் தாண்டி கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக இருக்கின்றது.
இது தொடர்பாக கீழ் வரும் பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
1. சியா விதைகள்
உடலில் கால்சியம் குறைபாட்டை சரிச் செய்வதற்கு சியா விதை சாப்பிடலாம். ஏனெனின் சியா விதைகளில் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.
அத்துடன் எலும்புகள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
2. சூரியகாந்தி விதை
விதைகளில் பொதுவாக கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கும். இதன்படி, கிடைப்பதற்கு அரிதாக இருக்கும் சூரியகாந்தி விதைகளில் கால்சியம் நிறைந்துள்ளது.
சூரிய காந்தி விதைகளில் மெக்னீசியம், வைட்டமின் ஈ ஆகிய ஊட்டசத்துக்கள் அதிகமாகவுள்ளது.
3. ஆளி விதைகள்
விதைகளில் அதிகமாக கால்சியம் சத்து உள்ளது என்பதற்கு ஆளி விதைகள் சரியான உதாரணமாகும்.
உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு இந்த விதைகள் பெரிதும் பங்களிப்பு செய்கின்றது. எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்ல செரிமானத்திற்கும் உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |