இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்
வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி காணப்படும் கெட்ட கொழுப்புகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பலரும் அதிக நேரம் அமர்ந்து கொண்டு செய்யும் வேலையை அதிகமாக செய்து வரும் நிலையில், இதனால் உடல் எடையும் அதிகரித்து விடுகின்றது.
உடல் எடை மட்டுமின்றி வயிற்று சுற்றி கெட்ட கொழுப்புகள் அதிகரித்து தொப்பை ஏற்படுவதுடன், இதனை குறைப்பதற்கு பல வழிகளையும், செயல்முறைகளையும் செய்து வருகின்றனர்.
நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், எடையைக் குறைக்க சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வயிற்றை சுற்றி தொப்பை குறைக்க வேண்டுமா?
ஒரே இடத்தில் 8 அல்லது 10 மணி நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கு இடையே 5 நிமிடங்கள் எழுந்து வெளியே கொஞ்சம் நடக்க வேண்டும். இதனால் எடை கட்டுக்குள் வருமாம்.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் போது சில நொருக்கு தீனிகளை நாம் எடுத்துக்கொள்வதும் எடை அதிகரிக்கின்றது. இதனை முடிந்த வரை தவிர்ப்பதுடன், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் காலையில் வெதுவெதுப்பான நீரை குடித்தால் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு நிச்சயம் கரையும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொண்டால், எடை அதிகரிப்பதை தவிர்க்க முடியும். இந்த உணவுகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வை தருவதுடன், அதிக உணவை சாப்பிடுவதை தடுப்பதால் நிச்சயம் உடல் எடை குறைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |