அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மதிப்பு 30 லட்சமாம்
நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி கொடுத்த பரிசு ரசிகர்களிடையே வாயடைக்க வைத்துள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் அஜித் ஷாலினி இருவரும் அமர்களம் படத்தில் நடித்ததன் மூலம் காதலித்து பின்பு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
2009ம் ஆண்டு அஜித்தைக் காதலித்து வந்த இவர், அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களை நடித்த முடித்த பின்பு திருமணம் செய்து கொண்டார்.
பின்பு இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். நடிகர் அஜித் தற்போது வரை உச்ச நடிகராக வலம்வருகின்றார்.
நடிகர் அஜித் 10வது வகுப்பு வரை படித்துவிட்டு என்ஃபீல்டு கம்பெனி ஒன்றில் மெக்கானிக் ஆவதற்காக ஆறு மாத காலப் பயிற்சி எடுத்தார்.
தந்தையின் வற்புறுத்தலால் அந்த கம்பெனியை விட்டு விலகினார். இவ்வாறு பல வேலைகளை செய்த பின்பு விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஷாலினி பிறந்தநாள் பரிசு
பின்பு சினிமாவில் அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். இந்நிலையில் நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி அவருக்கு பிறந்தநாள் பரிசாக 30 லட்சம் மதிப்பிலான பைக் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அஜித் பிறந்தநாளான இன்று அவரை சிறப்பிக்கும் பொருட்டு தீனா, மங்காத்தா, பில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ஷாலினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதுடன், டுகாட்டி பைக் உடன் பிறந்த நாள் கேக் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சிலர் அஜித்துக்கு ஏற்ற பரிசு என கமெண்ட் செய்து வருகின்றன.
அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிதத்து வருவதுடன், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |