என்னது சாதாரண பன்னுக்கெல்லாம் திருவிழாவா? எங்கனு நீங்களே பாருங்க!
ஹொங்கொங்கின் சியுங் சாவ் தீவில் வருடத்தில் ஒருமுறை பன் திருவிழா நடைபெறும். இந்நிலையில் இந்த வருடமும் அந்தத் திருவிழா நடைபெற்றுள்ளது.
அதாவது, 60 அடி உயரத்துக்கு பன் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னுமொரு அம்சம் என்னவென்றால், கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருக்கும் பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதியிலுள்ளவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
image - hongkong cheapo
இம் முறை இந்த பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள் தங்களால் முடிந்தளவு பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர்.
இதனால் அந்தத் தீவில் வீதிகளில் வண்ணமயமான ஊர்வலங்கள் நடைபெற்றன.
அதுமாத்திரமின்றி பாரம்பரிய இசையுடன் கூடிய சிங்க நடனங்களும் இடம்பெற்றிருந்தன.
image - flickr