பீட்சா நடுவில் இந்த சின்ன டேபிள் வைப்பது ஏன் தெரியுமா? பலரும் அறிந்திடாத ஒரு தகவல்
இன்றைய நவீன உலகில் பலரும் தூரிதமான உணவுகளை விரும்பி உண்ணுகிறோம். ஆனால் அதிலிருக்கும் கெடுதலை பற்றி கவலைப்படுவதில்லை.
அந்த வகையில் பீட்சாவை விரும்பி உண்ணாத நபர்களே இல்லை. மேற்கத்திய உணவுகளில் மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுவது இந்த பீட்சா தான். இந்த பீட்சா உலகளவில் இன்றும் பிரபலமான உணவாக கருதப்படுகிறது.
இதன் ருசியும், இதில் சேர்க்கப்படும் வண்ணமயமான டாப்பிங்ஸ் என்று சொல்லப்படும் காய்கறிகள், இறைச்சிகள் போன்றவை இதை சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு தூண்டுகிறது.
பல வகையான பீட்சாக்கள் உலகளவில் இருந்தாலும் சீஸ் சேர்த்த பீட்சாக்கள் தான் அதிக பேருக்கு பிடித்தமானவை. இந்த நிலையில், எந்த வகையான பீட்சா வாங்கினாலும் அதன் நடுவில் ஒரு சின்ன டேபிள் அல்லது நாற்காலியை வைத்து தருவது வழக்கம்.
இதை ஏன் தருகின்றனர் என பலருக்கும் இதுவரை தெரியாது. சிலருக்கு தான் இதற்கான காரணத்தை அறிந்திருக்க கூடும். இதனை பீட்சாவில் பயன்படுத்தும் சிறிய பிளாஸ்டிக் டேபிளை பீட்சா ஸ்டூல் அல்லது பீட்சா டேபிள் என்று சொல்வோம்.
இவை பீட்சாவின் நடுவில் வைப்பதால் அது அந்த அட்டையின் மேல் பகுதியில் படாமல் இருக்கும். இதனால் பீட்சா நாம் எதிர்பார்த்த படியே எந்தவித பாதிப்பும் இல்லாமல் அழகாக நம்மை வந்து சேரும்.
எனவே எந்தவித சேதமும் இல்லாமல் பீட்சாவை நாம் சாப்பிடுவதற்காகவே இந்த பீட்சா டேபிளை அதில் வைத்துள்ளனர்.