தமிழ்பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு.. மும்பை இந்தியன்ஸ் கொடுத்த சர்ஃப்ரைஸ்! வைரல் வீடியோ
ந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட தொகுப்பாளினி சஞ்சனாவுக்கும் கடந்த (15.03.2021) கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. மேலும், 28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப்பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக சஞ்சனா கணேசன் உள்ளார். இதையடுத்து, கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்கள் சிலரை மட்டுமே வைத்து திருமணம் இனிதே நடைபெற்றுள்ளது. இதனிடையே, பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் இருவரும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இன்று, எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். எங்களுடைய திருமணம் மற்றும் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்” என தனது திருமண புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,பும்ராவுக்கு, கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வர, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ராவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. இந்த புகைப்படத்தால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.