சொன்ன வாக்கை மீறாத நட்சத்திரங்கள் - 27 நட்சத்திரங்களில் நீங்க இருக்கீங்களா?
ஜோதிட ரீதியாக பார்க்கையில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கும் எனப்படுகின்றது. அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எப்போதும் நீதி நேர்மை என இருப்பார்களாம்.
நேர்மையான நட்சத்திரங்கள்
பொதுவாக மாதங்கள் வரும் போது நமது கிரகப்பலன்களும் மாறும். இதில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த மாதம் அதற்கேற்ற பலனை கொடுக்கும்.
அதே போல ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு நட்சத்திரங்களின் பலனும் அடிக்கடி மாறும். இந்த நட்சத்திரங்களுக்கு சிறப்பான குணாதிசயங்களும் உள்ளது.
அந்த வகையில் சில நட்சத்திரங்களில் பிற்நதவர்கள் எப்போதும் பிறக்கு கொடுத்த வாக்கை மீறாமல் நீதி நேர்மை நியாயம் என இருப்பார்கள் எனப்படுகின்றது. அதை பற்றி பார்க்கலாம்.

பூசம்
- இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். சனியின் ஆதிக்கம் இருப்பதால், இந்த நட்சத்திரக்காரர்கள் எப்போதும் நீதியும் நியாயமும் தவறாமல் வாழ்வார்கள்.
- ஒரு விடயத்தை இவர்களை நம்பி ஒப்படைத்தால், அதை தன்னுடைய கடமையாகக் கருதி முழு பொறுப்புடனும் அதை செய்து முடிப்பார்கள்.
- “மன்னிப்பு” என்ற வார்த்தை இவர்களுக்கு பிடிக்காது சொன்ன வாக்கை மீறுவதும் இவர்களின் அகராதியிலேயே இல்லை. எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாமல், உறுதியான மனதுடன் வாழக்கூடியவர்களே இவர்கள்.
ரோகிணி
- இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திர பகவான். சந்திரன் மனோகாரகன் என்பதால், இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மன உறுதி மிகவும் வலிமையாக இருக்கும்.
- மனதளவில் உறுதியுடன் இருப்பதுடன், இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் இவர்களிடம் இருக்கும். இவர்கள் ஒரு முடிவு எடுத்தால் தெளிவும் நிதானமும் அதில் இருக்கும்.
- ஒருமுறை முடிவு எடுத்துவிட்டால், அதிலிருந்து எளிதில் பின்வாங்காத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான் பின்வாங்கவே மாட்டார்கள்.
உத்திரம்
- உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஆதிக்கம் காரணமாக, இவர்களது வாழ்வில் நேர்மை மற்றும் தர்மம் என்பது இரு கண்களாக இருக்கும்.
- பேர், புகழ், பதவி, அந்தஸ்தை விட சுயமரியாதையே இவர்களுக்கு முதன்மை. எப்போதும் தர்மத்தின் பாதையில் நடந்து, பிறருக்கு முன்மாதிரியாக வாழக்கூடியவர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).