நவம்பரில் ஏற்படும் புதன் நட்சத்திர பெயர்ச்சி! பணமழையை பெறும் 3 ராசியினர்
Budhan Nakshatra Peyarchi: புதன் பெயர்ச்சி நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் பணமழையில் நனையும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
புதன் பெயர்ச்சி
கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கிரகம், புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்து குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நிலையில், இத்தருணத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.
மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக இருக்கும் புதன், தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகின்றார். நவம்பர் 25ம் தேதி வரை சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாக நட்சத்திரத்திற்கு நுழையவுள்ள நிலையில், இதில் டிசம்பர் 4ம் தேதிவரை இருக்கின்றார்.
விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் இருக்கும் நிலையில், 3 ராசியினர் நேர்மறையான பலன்களை பெறுகின்றனர். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் நிதி நிலையில் முன்னேற்றம், வருமானத்தில் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையுமாம்.
பணிபுரிபவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்புகளாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், புதிய ஒப்பந்தமும் கிடைக்குமாம். முதலீடுகளால் நல்ல வருமானம், பெரியளவில் லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சியினால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இத்தருணத்தில் நல்ல வாய்ப்பும் கிடைக்கும்.
வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நட்புகள் கிடைப்பதுடன், தொழிலில் விரிவாக்கம் செய்யும் வாய்ப்பும் கிடைக்குமாம். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியினால் நிதி ரீதியாக உள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வருவதுடன், வணிகர்களுக்கு பெரிய அளவில் லாபமும், வாய்ப்பும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், பணிபுரிபவர்கள் தங்களது சிறப்பான திறமையை வெளிக்காட்டி அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரித்து, புதிய முதலீட்டில் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |