டைரியாக மாறிய பாஸ்போர்ட்... புதுப்பிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: வைரல் வீடியோ
தன்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்த நிலையில், அதன் காணொளியினையும் வெளியிட்டுள்ளார்.
டைரியாக மாறிய பாஸ்போர்ட்
பொதுவாக நாம் வசிக்கும் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் என்பது மிகவும் அவசியம்.
இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட காலம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பின்பு அதற்கு காலாவதியாகும் தேதியும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு காலாவதி ஆகும் நேரத்தில் நாம் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதுப்பிக்க வேண்டும். இங்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வந்தவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது பாஸ்போர்ட் காலாவதியானதால், அதனை புதுப்பிக்க எடுத்து பார்த்துள்ளார்.
அப்பொழுது பாஸ்போட்டில் குடும்ப உறுப்பினர்கள், போன் நம்பரும், வீட்டு கணக்கு இவற்றினை எழுதி வைத்துள்ளனர். அதாவது இதனை டைரியாக நினைத்து பாவித்து வந்துள்ளனர். குறித்த நபர் அதனை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் 57 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்குகிறது.
அதாவது, அந்த நாடுகளுக்கு செல்ல முன்பே விசா எடுக்க வேண்டியதில்லையாம். அந்நாடுகளுக்கு சென்றவுடன் on-arrival எனப்படும் விசாவை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
An elderly gentleman submitted his Passport for renewal. He was not aware of what someone in his house did.
— D Prasanth Nair (@DPrasanthNair) November 2, 2023
The officer has still not recovered from the shock after seeing this.
(It's is Malayalam, but you will understand the same)
Rcvd from WA pic.twitter.com/0dw62o9Csm
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |