இசைக்குயில் ஜானகியின் நட்பு காதலாகியது எப்படி? பலரும் அறியாத காதல் கதை
சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் பாடகி ஜானகியின் காதல் கதையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாடகி ஜானகி
இளையராஜா முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமான அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளி உன்ன தேடுதே என்ற பாடலை பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகயவர் தான் பாடகி ஜானகி
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் இளம் வயது முதலே இசைக்கச்சேரியில் மட்டுமே பாடினார். கொஞ்சம் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடலை பாடுவதற்கு முன்னணி பாடகியான பி.சுசிலா பாட மறுத்துள்ளார்.
ஏனெனில் நாதஷ்வர ஸ்வரத்தோடு இணைந்து பாட என்று என்பதற்காக மறுத்த நிலையில், அப்பாடலை ஜானகி பாடி அசத்தியிருந்ததோடு, ஜானகிக்கு பெயரையும் வாங்கிக் கொடுத்தது.
ஜானகி மேடை பாடகியாக இருந்த தருணத்தில் ராம்பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இவர் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யும் நபரின் மகன்.
ஜானகியின் திறமை மேடை கச்சேரியில் முடிந்துவிடக்கூடாது என்று தனது தந்தையிடம் கூறியதோடு, அவரின் ஆலோசனையின் பெயரிலே சென்னை வந்த ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தார்.
இவ்வாறு திரைதுறையில் வளர்ந்த ஜானகி ராம்பிரசாத் மீது கொண்டிருந்த நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளதோடு, ஆனால் தனது காதலை அவரிடம் கூறவில்லையாம்.
பின்பு ஜானகிக்கு அவருடனே திருமணம் முடிந்த நிலையில், ஜானகியின் திரை பயணத்திற்கு தனது வாழ்க்கையை முழுவதுமாக தியாகம் செய்தவர் ஆவார்.
ஜானகிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது மகன் வீட்டில் வசித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |