செரிமான பிரச்சினையால் அவதியா? இந்த புளித்த உணவை கட்டாயம் எடுத்துக்கோங்க
பொதுவாக புளித்த உணவுகளை எடுத்துக்கொண்டால் செரிமான பிரச்சினை இருக்காது. அந்த அளவிற்கு இதன் புளிப்பு சுவையானது நன்மை அளிக்கின்றது.
புளித்த உணவு ஏன் சாப்பிட வேண்டும்?
இயற்கையான முறையில் பல நுண்ணுயிர்களான பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவை கலந்து புளித்த உணவாகவும், பானமாகவும் மாறுகின்றது.
இத்தருணத்தில் உணவு மற்றும் பானங்களில் உள்ள இயற்கையான கலவைகள் மற்றும் சர்க்கரைகளை நுண்ணுயிர்கர் உடைக்கின்றது.
பொதுவாக புளித்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு, செரிமான நலத்திற்கு நல்லது.
புளித்த உணவுகள் எவை?
பாரம்பரியமாக நம் வீட்டில் செய்யும் மோரில் புரோபயாடிக் அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுவதுடன், இதனை பானமாகவும், சமையலில் புளிப்பு சுவைக்கும் சேர்க்கலாம்.
இந்தோனேசிய உணவான டெம்பே இவற்றை புளித்த சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இவற்றில் புரதங்கள் மற்றும் புரோபயாடிக் அதிகமாக உள்ளதால், இதனை வறுத்தோ, சாண்ட்விச்சாகவோ, சாலட்டாகவே சாப்பிடலாம். செரிமான பிரச்சினையும், புரதத்தையும் அதிகரிக்கின்றது.
புளித்த மாவில் செய்யப்பட்ட பிரட் செரிமானத்திற்கு உதவுகின்றது. மேலும் இதில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக இருக்கின்றது.
கொம்புச்சா என்ற புளிப்பு நிறைந்த பானமான இதில் புரோபயாடிக் மற்றும் ஆர்கானிக் ஆசிட் காணப்படுகின்றது. இவையும் செரிமான பிரச்சினை தவிர்க்கின்றது.
ஜப்பான் பாரம்பரிய உணவான மிசோ, புளித்த சோயாபீன்ஸ் அல்லது தானியங்களிலிருந்து செய்யப்படுகின்றது. இதனை சூப்பாக நாம் பருகலாம். செரிமானத்திற்கு உதவி செய்யும்.
தென் கொரியாவின் காரமான உணவாக கிம்சி புளித்த காய்கறிகள் மற்றும் முட்டை கோஸ், முள்ளங்கி இவற்றினால் செய்யப்படுகின்றது. இவையும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.
சார்க்ரட் என்ற முட்டைகோஸ் ஊறுகாய் ஐரோப்பிய நாடுகளின் உணவுப்பட்டியலில் பிரதான உணவாக உள்ளது. செரிமானத்திற்கு உதவுவதுடன், முட்டைகோஸை புகிக்க வைப்பதால் அதில் உள்ள வைட்டமின், மினரல் அதிகமாகவே இருக்கின்றது.
புரோபயாடிக் நிறைந்த யோகர்ட் குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது. தினமும் இதனை எடுத்துக்கொண்டால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆப்பிள் சைடர் வினிகரில் இருக்கும் அசிடிக் ஆசிட், நமது குடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழித்து செரிமான பிரச்சினை போக்குகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிறிது தண்ணீரில் குறித்த வினிகரை கலந்து குடித்தால் நல்லது. ஆனால் அசிடிக் தன்மை உள்ளதால் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |