நீரிழிவு நோயாளிகளுக்கு தாறுமாறாக நன்மை அளிக்கும் சிகப்பு அரிசி
பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.
குறிப்பாக உப்பு, வெள்ளைச் சர்க்கரை, பால் பொருள்கள் ஆகியவற்றை முடிந்தவரை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் விஷயம்.
அதேபோன்றுதான் அரிசியும் கார்போஹைடிரேட்டுகளை அதிகம் கொண்டுள்ளதால் உடல் பருமன் கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரைகளில் ஒன்று.
ஆனால், வெள்ளை அரிசிக்குப் பதிலாக சிவப்பு அரிசி பயன்பாடு அந்தக்காலத்தில் இருந்து வந்ததும் இதனால் பெரும்பாலாக இதய நோய், நீரிழிவு நோய் குறைவாக இருந்ததும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.
சிவப்பு அரிசி, சிவப்பு நிறங்களில் பல பெயர்களில் உள்ளன. சிவப்பு அரசியில் உள்ள 'அந்தோசயனின்' எனும் மூலக்கூறே இதற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இதுவே நோயெதிர்ப்பு சக்திக்கும் காரணமாகிறது.
சீனா, தாய்லாந்து, வியட்நாம் இந்த மூன்றும்தான் அரிசியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள். இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான்.
சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே.சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம்.
வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் பெரும் அதிர்ஷ்டமாம்! துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் உயிரினம் எது?
சிவப்பு அரிசி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்
மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படும் அரிசி என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைப்பது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது.
எளிதாக ஜீரணமடையும் என்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது. வயிறு எளிதாக இருப்பது போல தோன்றும்.
நல்ல ஆரோக்கியம், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருத்தல் ஆகியவற்றுக்கு உகந்தது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். இத்துடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடை குறையும்.
உடல் பலம் பெறவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
அடுத்ததாக உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெயில் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால், சிவப்பு அரிசி உடல் உஷ்ணத்தைத் தடுக்கிறது.
பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் சிவப்பு அறியாய் உண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இதர உடல் பிரச்னைகளும் சீராகும்.
நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு.
மேலும், புற்றுநோயைத் தடுக்கிறது, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது.
சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம். காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள்.
அரை நொடியில் அறிவாளியாக அருமையான மந்திரம்! தெறிக்கவிடும் சிறுவனின் காட்சி
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம்.
இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.
சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது. இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.
எடை இழப்புக்கு உதவும்
சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது.
அரிசியின் வெளிப்புற அடுக்கு அப்படியே வைக்கப்படுவதால் இது நார்ச்சத்தின் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டையும் கொண்டுள்ளது. உடலில் சேரும் உயர் கொழுப்புகளை கட்டுப்படுத்த அதிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.
சுக்குநூறாக சைக்கிள்! கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்பிழைத்த சிறுவன்: நடுங்க வைக்கும் காட்சி
கொழுப்பை குறைக்கலாம்
சிவப்பு அரிசியில் மட்டும் தான் வைட்டமின் இ உள்ளது. இது உடலில் இருக்கும் எல் டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்க செய்கிறது. சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை பரிசோதித்ததில் இதை பயன்படுத்தியவர்களுக்கு உடலில் எல்டிஎல் கொழுப்பு குறைந்தது கண்டறியப்பட்டது.
மேலும் இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யகூடியதாக இருக்கிறது. இதில் உள்ள மொனோக்கோலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது ரத்த கொழுப்பை குறைக்கும் மாத்திரைகளில் சேர்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
செரிமானத்தை மேம்படுத்தும்
அன்றாடம் உடல் வேலை செய்ய தேவையான ஆற்றலை இது வழங்குகிறது. இது நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் வைத்துகொள்ளும். இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பொருள்களாக உடலில் சென்று சேமிக்கப்படுகிறது.
சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
முன்னாள் காதலனை காரில் அழைத்துச் சென்று காதலி கொடுத்த ஷாக்! பொலிசாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
மெனோபாஸ் அறிகுறி பெண்களுக்கு
மாதவிடாய் சுழற்சி முடியும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு மெனோபாஸ் கால அறிகுறிகள் மிதமாகவோ தீவிரமாகவோ இருக்கும். இந்நிலையில் அடிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இது எலும்பு தேய்மானத்தை தடுக்கும். இதனால் மூட்டு வலி, முடக்குவாதம் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும்.
பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடும். எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கவும் செய்கிறது.இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைகளை தடுக்க செய்கிறது.
ஆஸ்துமாவுக்கு நல்லது
சிவப்பு அரிசி நுரையீரலை பாதுகாக்கும் சத்துகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தக்கூடும். இதிலிருக்கும் செலினியம் தொற்றுநோய்கள் உடலில் அண்டாமல் பாதுகாக்க செய்கிறது.
இதயத்துக்கு நன்மை செய்கிறது
மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு இதில் வைட்டமின் பி 1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் மிகுதியாகவே நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.
இதில் இருக்கும் வைட்டமின் இ உடலில் ஆற்றல் கொண்ட ஆன் டி ஆக்ஸிடண்ட் உடன் இணைந்து செயல்படும் போது அது இதய நோய்கள் வராமல் இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
சருமத்துக்கு நன்மை பயக்கிறது
சிவப்பு அரிசி உடல் ஆரோக்கியம் போன்று சருமத்துக்கும் அதிக நன்மைகளை செய்கிறது. இது சரும ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
சிவப்பு அரிசியில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கலை எதிர்த்து போராட செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போக்க செய்கிறது. மேலும் சரும சுருக்கம் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் உண்டாகும் பாதிப்பை குறைக்கும்.
பொதுவாக நெல்லில் வெளியே இருப்பது உமி, உள்ளே இருப்பது தவிடு, அதனுள் கரு, கடைசியாகத்தான் மாவுப்பொருள் என நான்கு பகுதிகள் இருக்கும். நாம் மூன்றையும் வெளியேற்றி சத்தில்லாத மாவுப்பொருளை தான் எடுத்துகொள்கிறோம்.
ஆனால் சிவப்பு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் மாவுச்சத்தில் சென்று சேர்க்கப்படுவதால் இதை தீட்டிய பிறகும் நாம் சத்தை பெற்றுவிட முடியும்.