முன்னாள் காதலனை காரில் அழைத்துச் சென்று காதலி கொடுத்த ஷாக்! பொலிசாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க காதலி போட்ட பிளான் பொலிசாரையே அதிர வைத்துள்ளது.
இன்று காதலில் தோல்வி ஏற்படுவது சாதாரணமாகி உள்ளது. ஆனால் ஒருசிலர் தோல்விக்கு பின்பு தனது வாழ்க்கையை குறித்து மாறி விடுகின்றனர். ஆனால் சிலருக்கு இந்த தோல்வி பழிவாங்குவதில் கொண்டு சென்றுவிடுகின்றது.
காதலனை கொலை செய்ய திட்டம்
இங்கு இங்கிலாந்தைச் சேர்ந்த சோபி என்ற 17 வயது பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய ஆதாம் என்ற 20 வயது இளைஞரை பழிவாங்க செய்துள்ள பிளான் பொலிசாரையே நிலைகுலைய வைத்துள்ளது.
இதற்காக பிளானை பக்காவாக போட்ட அந்தப் பெண், தான் என்ன செய்ய வேண்டும்? எப்படி கொலை செய்ய வேண்டும்? என்பதை பேப்பர் ஒன்றில் எழுதி வைத்துள்ளார்.
நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்
காதல் தோல்வி
2019 ஆம் ஆண்டில் தொடங்கிய காதல் திடீரென கசப்பாக மாறி ஆதாம் சோபி விட்டு பிரியும் நிலைக்கு சென்றுள்ளார். இதனை மனம் தாங்கிக்கொள்ளாமல் பழி வாங்கும் நிலைக்கு சோபி சென்றுள்ளார்.
ஆதாமை சித்திரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்ட அவர், ஒருநாள் ஆதாமை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். காரில் அழைத்துச் செல்லும்போது கத்தியை எடுத்து வெட்டியுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட ஆதாம், காரில் இருந்து குதித்து போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளார். தவலறிந்து வந்த காவல்துறையினர் சோஃபியை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் காவல்துறைக்கு இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சோஃபிக்கு பதிமூன்றரை ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.