பாரதிராஜா இறக்கும்போது உடல் யாரும் இல்லை ஏன்? தம்பி உடைத்த உண்மை
நடிகர் பாரதிராஜா அவர்கள் இறந்த அன்று தனியாக இருந்ததற்கான காரணம் என்ன என்று இந்த பதவில் விரிவாக காணலாம்.
இயக்குனர் பாரதிராஜா
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் சமீபத்தில் காலமான நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.
கிராமத்து கதையை மையமாக கொண்டு பல திரைப்படங்களை இயக்கியதுடன், பல கதாநாயகிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் பொதுமக்களின் வீதிக்கு கொண்டு வந்தவர் ஆவார்.

சிறந்த நடிகராகவும் திகழ்ந்த இவர் மகனின் இறப்பிற்கு பின்பு மனம் மற்றும் உடல் இரண்டிலும் பின்னடைவை சந்தித்தார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்பு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் இறக்கும் நேரத்தில் அனாதையாக இறந்தார் என்று கங்கை அமரன் ஆவேசமாக பேசியிருந்தார்.
காரணம் என்ன?
இந்நிலையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அண்ணன் இறக்கும் போது தனியாக இருந்தது ஏன் என்பதை கூறியு்ளளார். அதாவது கங்கை அமரன் தனது அண்ணன் மீது வைத்த பாசத்தினால் அவ்வாறு பேசியுள்ளார்.
அன்று நடந்த உண்மை அவருக்கு தெரியாது. தனது அண்ணி அண்ணனை நன்றாக கவனித்துக் கொண்டார். சம்பவத்தன்று தேனிக்கு ஒரு வேலையாக வந்த நிலையில், எதிர்பாராமல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தகவல் அறிந்ததும் அண்ணி உடனே சென்னைக்கு கிளம்பினார். மற்றபடி எந்தவொரு பிரச்சனையும் இல்லை... கங்கை அமரனுக்கும் நடந்தது என்ன என்பதை புரிய வைத்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |