கழுத்தில் ஏறிய தாலி! துள்ளிக் குதித்து மணப்பெண் மாப்பிள்ளைக்கு கொடுத்த ஷாக்
திருமணத்தில் தாலி கழுத்தில் ஏறியதும் மணப்பெண் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவருக்கும் மறக்கமுடியாத தருணமாகவே இருக்கும். சமீப காலங்களில் திருமண நிகழ்வுகளில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்று அது காணொளியாக வெளியாகி தெறிக்கவிடுகின்றது.

இங்கும் அவ்வாறான காணொளி ஒன்று இணையத்தில் அனல் பறக்க வைத்துள்ளது. ஆம் திருமண மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க ஐயர் தாலி எடுத்து கொடுத்ததும் மணமகன், மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட செல்லும் நேரத்தில் மணப்பெண்னோ துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இறுதியில் தனக்கு தாலிகட்டிய கணவரை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து, பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.