கோவை சரளாவாக மாறி மாப்பிள்ளையை தாக்கிய மணப்பெண்! வடிவேலு காமெடியையும் மிஞ்சிய திருமணம்... வாயடைத்து போன உறவினர்கள்
திருமண சடங்கின்போது மணமகன் கன்னத்தில் மணமகள் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உறவினர்கள் சூழ்ந்து இருக்க மணமக்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர். பெரியோர்கள் திருமண சடங்குகளை செய்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மணமகள் அருகில் இருந்த உறவினர் ஒருவர் வாயில் குட்கா மென்றுக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் அந்த நபரை அடித்துள்ளார். மணமேடையில் உட்கார்ந்துக்கொண்டு குட்கா மென்றுக்கொண்டிருக்கிறாயா எனஆத்திரத்துடன் கேட்டுள்ளார்.
அடி வாங்கியவர் என்ன நினைத்தாரோ என்னவோ நான் மட்டுமா குட்கா மென்றுக்கொண்டிருக்கிறேன். மாப்பிள்ளையும் தான் குட்கா போட்டிருக்கிறார் எனக் கூறியதுதான் தாமதம்.
கொஞ்ச நேரத்தில் அந்த இடம் கோவை சரளா- வடிவேலு ரக காமெடி காட்சியாக மாறியது.
வாயில் என்ன என மணமகள் ஆத்திரத்துடன் கேட்க மலுப்பலான பதிலை கூறியுள்ளார் நம்ம மாப்பிள்ளை. மாட்டிவிட்ட நபரை பார்த்து கடித்துக்கொண்டார்.
மணமகன் கன்னத்திலும் ஒரு பளார் விட்டார். உறவினர்கள் முன்னிலையும் வருங்கால மனைவி அடித்ததால் அவரது முகமே வாடிப்போனது. ஆனால் உறவினர்கள் முகத்தில் சிரிப்பலைகளை காணமுடிந்தது.