தாய்ப்பால் முக அழகுக்கு சிறந்தது!
இந்த உலகில் தாய்ப்பால் போன்று சத்துமிக்கதும் மருத்துவ குணம் நிறைந்ததுமான உணவு வேறெதுவும் இல்லை. பிரபல அமெரிக்க பாடகி ஹால்சி, 2021 ஜூலையில் தனக்கு மகன் பிறந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மகன் பிறந்ததிலிருந்து அவரின் சருமப் பராமரிப்பு வழக்கம் மாறிவிட்டதாகவும் அந்த மாற்றங்கள் என்ன என்பதையும் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியபோது, அதுவொரு சிறந்த தோல் பராமரிப்பு மூலப்பொருள் மற்றும் ஒட்சிசனேற்ற நல்ல கொழுப்புகள் அதில் அடங்கியிருப்பதாக தெரியவந்தது” என்றும் கூறினார்.
image - Getty/Indian Express
மூத்த மகப்பேற்று மருத்துவர் டாக்டர் சுஷ்ருதா மொகதம் இது குறித்து கூறுகையில்,
“ஒரு பெண்ணின் தாய்ப்பால் ஃபேஸ் க்ரீம், ஆன்டி ஏஜிங் என்பவற்றாய் செயற்படும். குழந்தை பெற்ற பெண்கள் அல்லது பெறவிருக்கும் பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கும்.
குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பாலை கொடுத்துவிட்டு எஞ்சிய தாய்ப்பாலை வீணாக்காமல் இருக்க சில விடயங்களை செய்யலாம்.
முகப்பரு, தொப்புள் கொடியைப் பிரித்தல், தோல் அழற்சி, தீக்காயங்கள், சிறிய தோல் காயங்கள் என்பவற்றுக்கு தாய்ப்பால் சிறந்த நிவாரணியாக இருக்கின்றது.
image - Femina.in
தாய்ப்பால் குறித்து சில விடயங்கள்...
- சிகரட் அல்லது அல்கஹால் அருந்திய 2 மணி நேரத்துக்குள் வெளிப்படுத்திய தாய்ப்பாலை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் இவை பாலில் சுரக்கப்பட்டு தரத்தை மாற்றிவிடும்.
- கரைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கள தாய்ப்பாலை 2 மணி நேரம் பயன்படுத்தாமல் வைத்திருந்து, மீண்டும் உறைய வைக்கவோ, குளிரூட்டவோ வேண்டாம். இவ்வாறு செய்தால் அதில் பக்டீரியா மாசுபடுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
- மலட்டுத்தன்மை மற்றும் அசெப்சிஸ் என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின் தனது சொந்த தாய்ப்பாலை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.
image - Baby Chick