உடல் முழுவதும் காயங்கள்: வீட்டிற்கு வந்து கதறிய 7 வயது சிறுமி! கொடூரமாக செயல்பட்ட 63 வயது முதியவர்
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள், சிறுமிகள் அனுபவிக்கும் வன்கொடுமை தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது.
பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(63). விவசாயியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளான 7 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு, இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர்.
அப்போது, சிறுமி தனக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
குறித்த புகாரின் பேரில், கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த மகளிர் பொலிசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.