மீன் சாப்பிட்டால் தோல் புற்றுநோய் வருமா? ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை
வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவதால் தோல் புற்றுநோய்க்கான அபாயம் ஏற்படலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் NIH-AARP டயட் மற்றும் ஹெல்த் ஆய்வின்படி, தினசரி 42.8 கிராம் (வாரத்திற்கு சுமார் 300 கிராம்) மீன்களை உட்கொள்வதால், தோல் புற்றுநோயான மெலனோமாவின் பாதிப்பு 22 சதவீதம் அதிகம் உள்ளதாம்.
சுமார் 4,91,367 அமெரிக்க குடிமக்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அடிப்படையில், புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக மீன்களை சாப்பிடுவது, தோலின் வெளிப்புற அடுக்கில் அசாதாரண செல்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறதாம்.
இந்த நிலையை மெலனோமா என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான தோல் புற்றுநோய்களில் ஒன்றாகும்.
மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்களான டி மற்றும் பி2 (ரைபோஃப்ளேவின்) போன்றவை அதிகம் உள்ளது.
மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் அதிகம் உள்ளது.
எனவே, ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவதை பலரும் வழக்கமான ஒன்றாக வைத்துள்ளோம்.
இதை தான் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனும் பரிந்துரைக்கிறது. மீன்களில் உள்ள பாலிகுளோரினேட்டட் பைபினைல்கள், டையாக்ஸின்கள்.
மீன்களை சாப்பிடுவதால் தோல் புற்றுநோயா?
ஆர்சனிக் மற்றும் பாதரசம் போன்ற மாசுக்களால் மீன்களை சாப்பிடுவதால் தோல் புற்றுநோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், மீன் உட்கொள்ளல் மற்றும் மெலனோமா ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை முந்தைய தொற்றுநோயியல் ஆய்வுகள் குறைவாகவும் சீரற்றதாகவும் இருந்தன.
பொதுவாக, அனைத்து மெலனோமாக்களுக்கும் உருவாவதற்கு சரியான காரணம் தெளிவாக இல்லை, ஆனால் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சின் வெளிப்பாடு மெலனோமாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று டாக்டர் ரைசாடா கூறிகிறார்.
அதே போன்று, போர்டிஸ் மருத்துவமனை முலுண்டின் ஓன்கோ அறுவை சிகிச்சையின் ஆலோசகர் டாக்டர் ஹிதேஷ் ஆர் சிங்கவி கருத்துப்படி, ஊட்டச்சத்து சக்தியின் முதன்மை ஆதாரமாக மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
மீன் வகை மற்றும் சமையல் முறை போன்ற காரணிகள் இவற்றின் அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறுகிறார்.
அதே போன்று, மீன் உட்கொள்வதை நிறுத்துவது என்பது தன்னால் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.