எதிர்பாராமல் திமிங்கிலத்திடம் சிக்கிய இளைஞன் கடைசியில் உயிர் தப்பினாரா?
கடலில் சிறிய படகில் சென்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவன் திமிங்கிலத்திடம் சிக்கும் காட்சி தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைரல் வீடியோ
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதில் நம்மை சுவாரஷ்யப்படுத்தும் வீடியோக்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வீடியோக்களும் காணப்படும். உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் அதை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்வையிட முடியும்.
அந்த அளவிற்கு தொழிநுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது. கடலில் சிறிய படகில் செல்வது ஒரு சவால் தான். அப்படி ஒரு வீடியோ தான் இன்று வைரலாகி வருகின்றது.
அதாவது ஒரு திமிங்கலம் தண்ணீருக்கு அடியில் இருந்து வந்து சிறிய படகுபோல் இருந்த அட்ரியனை விழுங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் திமிங்கலம் அவரது மகனை மீண்டும் தண்ணீரில் விடுவித்தது.
மகன் அட்ரியன் சிமன்காஸ் திமிங்கலத்தால் விழுங்கப்பட்டபோது, அவரது தந்தை டேல் சில மீட்டர் தொலைவில் தான் இருந்தார்.
தன் மகன் திமிங்கலத்தின் வாய்க்குள் செல்வதைக் கண்டு, தந்தை சிறிதும் பதறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |