தங்கத்தை விழுங்கிய சிறுவன்... 5 நாட்கள் தவியாய் தவித்த தாய்! கடைசியில் நடந்தது என்ன?
சீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் தங்கத்தை விழுங்கியதால், அவனது தாய் அவனை எங்கும் செல்லவிடாமல் வீட்டில் 5 நாட்களாக பாதுகாத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தை விழுங்கிய சிறுவன்
சீனாவில் ஜியாங்கு பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் 10 கிராம் தங்கத்தினை தெரியாமல் விழுங்கியுள்ளான்.
கடந்த அக்டோபர் 22ம் தேதி குறித்த சிறுவன் செய்துள்ளதுடன், தாய் விழுங்கியதையும் அவரது தாயிடம் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக் கொண்ட தாய், அதன் பின்பு உண்மையறிந்து பெரும் அதி்ர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் குறித்த சிறுவனை வெளியே விடாமல் வீட்டுக்குள் வைத்து ஐந்து நாட்கள் மலம் கழிக்க வைத்துள்ளார். ஆனாலும் சிறுவன் விழுங்கிய தங்கம் வெளியே வரவில்லை.
இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தங்கத்தை எடுத்ததாக கூறியுள்ளார். அதனை எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சிறுவன் விழுங்கிய தங்கத்தின் விலை 10 ஆயிரம் யுவான் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |