பிறந்தநாளுக்கு இப்படியா பண்ணுவீங்க? சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் செய்த காரியம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பிறந்தநாள் என்றாலே அங்கு கேக் வெட்டி கொண்டாடுவதுடன், உறவினர்கள் நண்பர்கள் சூழ்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
சில தருணங்களில் கொண்டாட்டம் என்ற பெயரில் தீ விபத்தில் சிக்கும் நபர்களை நாம் அவதானித்திருப்போம்.
இங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டுவதற்கு ஆயத்தமான சிறுவன் தலையில் திடீரென முட்டையை உடைத்தும், மஞ்சள் தண்ணீரை ஊற்றியும் திகைக்க வைத்துள்ளனர்.
முட்டை, மஞ்சள் தண்ணீரைத் தொடர்ந்தும் விடாமல் மறுபடியும் துரத்திய உறவினர்கள் வெட்ட இருந்த கேக்கினை எடுத்து முகத்தில் வைத்து பூசி மிகவும் திகைக்க வைத்துள்ளனர்.
குறித்த காணொளியினை அவதானித்த நெட்டிசன்கள் உறவினர்களை திட்டித் தீர்த்து வருகின்றனர்.