வானிலை மாறுவதால் உடல் நிலை மோசமாகிறதா... இந்த பழங்களை சாப்பிடுங்கள் போதும்!
பருவநிலை மாற்றத்தினால் பெரும்பாலான நபர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். ஆம் வானிலை அதிகமாக மாறுவதால் பெரும்பாலான மக்கள் தங்களது ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர்.
இவ்வாறு வானிலை மாற்றத்தினால் சளி, இருமல், வைரஸ் காய்ச்சல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே.
இங்கு சீர்தோஷ நிலையினை சமாளித்து நோய் எதிர்ப்பு சக்தியினை தக்க வைத்துக்கொள்ளும் சில பழ வகைகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வானிலை மாற்றத்தினை சமாளிக்கும் பழங்கள்
அதிக வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி ஆற்றலை அதிகரிக்க செர்ரி பழங்கள் உதவுகின்றது.
ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ள பழகமாக ஸ்ட்ராபெர்ரி இருப்பதால், இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
பல வைட்டமின்களைக் கொண்டுள்ள பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இதே போன்று கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்திருக்கும் பழமாக பிளாக்பெரி காணப்படுகின்றது.