ஹாலிவுட் ஸ்டாரை தட்டித்தூக்கிய அக்ஷய்குமார்! கின்னஸ் சாதனை படைத்தது இதில் தான்
3 நிமிடங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் செல்பி எடுத்து நடிகர் அக்ஷய்குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சினிமா பயணம்
பாலிவுட்டில் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அக்ஷய் குமார். இவருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பலக் கோடி ரசிகர்கள் வைத்துள்ளார்.
திரைப்படங்கள் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாகவும் நடிகர் அக்ஷய் குமார் பார்க்கப்படுகிறார்.
இவர் சமிபத்தில் ரஜினிகாந் நடிப்பில் வெளியான '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை திணற விட்டிருப்பார், அந்தளவு யதார்த்தமாக நடிக்கக்கூடியவர்.
இந்த நிலையில் இவர் நடித்த “செல்ஃபி” திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு செல்பி டாஸ்க்கை வைத்து அதில் இவர் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைத்த அக்ஷய் குமார்
இதன்படி, 3 நிமிடங்கள் சுமார் 184 செல்பி புகைப்படங்களை தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்து பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளார்.
மேலும் இந்த சாதனையை 2015 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த டுவைன் ஜான்சன் (ராக்) என்பவர் பெற்றுள்ளார்.இவர் 3 நிமிடங்களில் 105 செல்பிகளை எடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் என்பவர் 3 நிமிடங்களில் 168 செல்ஃபிகளை எடுத்துள்ளார்.
இந்த வரிசையில் இந்த வருடம் அக்ஷய் குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அக்ஷய் குமார் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
#AkshayKumar breaks the Guinness World Record for taking the maximum number of selfies in just 3 minutes!?? ? pic.twitter.com/aSW6bsilDH
— FilmiFever (@FilmiFever) February 24, 2023