விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்: இந்த சிம்பு பட பாடல் தானாம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனக்கு பிடித்த தமிழ் பாடல் ஒன்று குறித்து சமீபத்திய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளமை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விராட் கோலி
கிங் கோலி என்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலி தொடர்ச்சியாக 9 தேர்வுத் துடுப்பாட்டப் தொடர்களில் (2015-2017) வெற்றி பெற்று . ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார்.
தலைவராக விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் (2005-2008) நூறுகள் அடித்தவர் மற்றும் இரண்டு ஆட்டப்பகுதிகளில் தொடர்ச்சியாக நூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.
இருநூறுகள் அடித்த முதல் இந்தியத் தலைவர் ஆவார். கிரிகெட் பிரியர்களுக்கு மாத்திரமின்றி ஏறாளமான பெண்களுக்கு கிரஸ்சாக இருக்கும் வீராட் கோலி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். உலகின் 100 பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கின்றார்.
நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா-அகாய் க்யூட்டான இரு பிள்ளைகள் இருக்கின்றனர். விராட் கோலியை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி குடும்ப தலைவராக பலருக்கு பிடிக்கும்.
விராட் கோலி, தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். முன்னர் இந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் இருந்த இவர், தற்போது நட்சத்திர வீரராக மட்டும் இருக்கிறார்.
அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடர்பான ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது அவர் ப்ளே லிஸ்டில் இருக்கும் தற்போதைய பிடித்த பாடல் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், “அதை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்..” என்று கூறிவிட்டு அந்த பாடலை ப்ளே செய்தார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரவாகி வருகின்றது.
𝐖𝐡𝐢𝐜𝐡 𝐬𝐨𝐧𝐠 𝐢𝐬 𝐕𝐢𝐫𝐚𝐭 𝐥𝐢𝐬𝐭𝐞𝐧𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐨𝐧 𝐥𝐨𝐨𝐩 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐧𝐨𝐰? 🎶
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 1, 2025
“You’ll be shocked”, he says. We’re grooving too! 🥰 pic.twitter.com/NlZTNAZbjD
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |