கொதி நீரை பயன்படுத்துறீங்களா? மருத்துவர் எச்சரிக்கை
பொதுவாக பெண்கள் தனது உடம்பில் மிகவும் பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையிலும் பார்த்துக் கொள்ள வேண்டிய உறுப்புக்களில் ஒன்று தான் பெண்ணுறுப்பு.
இங்குள்ள சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். இதனால் அங்கு அழுத்தம் கொடுப்பது கூட பிரச்சினையை உண்டு பண்ணும். கர்ப்பப்பை, கருப்பை மற்றும் பிற உறுப்புகளை உள்ளடக்கிய இந்த உறுப்பில் முறையாக பராமரிக்காவிட்டால் இங்கு சுகாதாரப் பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.
மென்மையான தோல் கொண்ட பெண்ணுறுப்பில் ஒருவகையான எலாஸ்டிக் தன்மை உள்ளது. இது நம்முடையை வாயை போன்று விரிந்து, சுருங்கும்.
அதே சமயம், குழந்தை பெற்ற பெண்களுக்கு பெண்ணுறுப்பு தளர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது, ஹார்மோன் மாற்றம், விளையாட்டு துறை போன்ற காரணங்களால் பெண்ணுறுப்பில் தளர்வு ஏற்படலாம்.

இவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வந்து விட்டால் என்ன மாதிரியான முறையில் வைத்தியம் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பெண்ணுறுப்பை கொதிநீர் கழுவினால் என்ன நடக்கும்?
1. பெண்ணுறுப்பு அரிக்கிறது என்றால் உடனடியாக சுத்தமான நீர் கொண்டு கழுவ வேண்டும். அதை தவிர்த்து வேறு வைத்தியங்கள் செய்வதை பெண்ணுறுப்பில் உள்ள நல்ல பாக்ரீயாக்களை அழிக்கலாம்.
2. இனிமையான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட கற்றாழையை பெண்ணுறுப்பில் தடவலாம். இது அரிப்பைக் குறைக்கும்.
3. கடுமையான அரிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேயிலை மர எண்ணெய்யை கொஞ்சமாக எடுத்து அந்த பகுதியில் தடவி விட்டு, மருத்துவரை பார்ப்பது நல்லது.

4. அரிப்புடன் துர்நாற்றம், எரிச்சல் இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாது. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
5. நன்றாக பெண்ணுறுப்பை சுத்தம் செய்த பின்னர், கொஞ்சமாக சுத்தமான தேங்காய் எண்ணெய் பூசிக் கொண்டு தூங்க வேண்டும். இது உங்களை அரிப்பில் இருந்து பாதுகாக்கும்.
முக்கிய குறிப்பு
பொதுவாக பெண்ணுறுப்பில் அரிப்பு, அழற்சி பிரச்சினை என்றால் சுடு நீரைக் கொண்டு் வைத்தியம் செய்யும்படி அறிவுறுத்துவார்கள். ஆனால் சுடுநீரை கொண்டு வைத்தியம் செய்தால் பெண்ணுறுப்பில் உள்ள நல்ல பக்ரீயாக்களும் இல்லாமல் போகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |