அவித்த முட்டையில் உள்ள ஊட்டச்சத்து என்னென்னனு தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தினை கொடுக்கும் அவித்த முட்டையின் முழுபலன் குறித்து தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்ட கொழுப்பு என இரண்டு உள்ளது.
முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சிவப்பு இறைச்சி, வறுத்த உணவுகள் போன்ற பலவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும்.
அதேவேளையில், அக்ரூட் பருப்பு , ஆலிவ் எண்ணெய், அவகேடோ, பாதாம், பூசணி விதை, சால்மன் மீன், மற்றும் முட்டை போன்றவற்றில் நல்ல கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரஸ், கோலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என உடலுக்குத் தேவையான பல முக்கியச் சத்துக்கள் அடங்கியுள்ளன.
எத்தனை முட்டை எடுத்துக் கொள்ளலாம்?
நாம்அன்றாடம் உண்ணும் பிற கொழுப்பு சத்துள்ள உணவுகளில் உள்ள அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ளது.
உங்களுக்கு இதய பிரச்சனை அல்லது அதிக ரத்த அழுத்தம் இல்லையென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிடலாம்.
ஏனெனில் புரதச்சத்து அதிகம் தேவைப்படுகிறவர்கள், வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு அவித்த முட்டையை சாப்பிடலாம்.
இதய பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் வரை சாப்பிடலாம்.
ஏனெனில், மஞ்சள் கருவில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், அது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை உயர்வதுடன், செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |