நடுவானில் யாராவது உயிரிழந்தால் உடலை என்ன செய்வார்கள் தெரியுமா? அதிர வைக்கும் உண்மைகள்

dead planes fact shocking
By Jon Mar 27, 2021 01:11 PM GMT
Report

விமான பயணத்தின்போது யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், பணிப்பெண்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பார்கள். இதற்கென விமான ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் விமானங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபரகணங்களும், விதிமுறைகளின்படி வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் விமானங்களில் போதிய இடவசதி இருக்காது என்பதால், முதலுதவி சிகிச்சைகளை வழங்கும்போது விமான ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் அருகில் இருக்கும் மற்ற பயணிகளுக்கும் இது கடினமான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணிகளுக்கு விமான ஊழியர்கள் சிகிச்சை வழங்குகின்றனர்.

அத்துடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளில் மருத்துவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் உதவியும் பெறப்படுகிறது. சில அவசர சமயங்களில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணியின் உயிரை காப்பாற்றுவதற்காக, அருகில் உள்ள விமான நிலையங்களில் பைலட்கள் விமானங்களை தரையிறக்கவும் செய்கின்றனர்.

ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னதாகவோ உடல் நலக்குறைவு ஏற்பட்ட பயணி உயிரிழந்து விடும் சூழல் சில சமயங்களில் ஏற்படுகிறது. அப்படி யாராவது ஒருவர் உயிரிழந்து விட்டால், அவரது உடல் போர்வையால் மூடப்படும். பின்னர் காலி இருக்கை ஏதேனும் இருக்கும்பட்சத்தில், அதில் அவரது உடல் வைக்கப்படும். ஒருவேளை விமானத்தில் இருக்கை எதுவும் காலியாக இல்லை என்றால், உடல்களை வைக்கக்கூடிய பையில், உயிரிழந்தவரின் உடல் வைக்கப்படும்.

பின்னர் விமானத்தின் பின் பகுதியில் உள்ள சமையலறையில் அவர் உடல் கிடத்தப்படும். சில சமயங்களில் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் விமான ஊழியர்களுக்கு ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விமான பயணத்தின்போது ஒருவர் உயிரிழந்து விட்டார். அவரது உடலுக்கு அருகே சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் சில பயணிகளுக்கு ஏற்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு என விமானங்களில் பிரத்யேகமான இடவசதிகள் எதுவும் இருக்காது.

எனவே நடுவானில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான நடைமுறைகள், ஒவ்வொரு விமான நிறுவனங்களை பொறுத்தும் மாறுபடுகின்றன. ஆனால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமாகவும், மரியாதையுடனும் கையாள வேண்டிய பொறுப்பு விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு உள்ளது. சம்பந்தப்பட்ட விமானம் தரையிறங்கியதும், பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

அனைவரும் கீழே இறங்கியவுடன், மருத்துவர்கள் வந்து உயிரிழந்தவரின் உடலை பரிசோதிப்பார்கள். பின்னர் அவரது உடல் வெளியே கொண்டு வரப்படும். ஒருவேளை உயிரிழந்த நபர் தனியாக பயணம் செய்திருந்தால், அவருடைய உறவினர்களை விமான நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும். அதன்பின்னர் விமானத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து அவர்களிடம் முழுமையாக விளக்கப்படும்.

பொதுவாக பயணிகள் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால் விமானம் உடனே அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்படும். ஆனால் விமானத்தில் யாராவது ஒருவர் உயிரிழந்து விட்டால், விமானம் திருப்பப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US