Body dysmorphic disorder(BDD) என்பது என்ன? அறிகுறிகளும் சிகிச்சையும்
Body dysmorphic disorder என்பது தங்களது உடல் மற்றும் தோற்றத்தை பற்றிய எதிர்மறை எண்ணத்தால் மனதளவில் சந்திக்கும் பிரச்சனைகளை குறிக்கிறது.
எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் வாழ்வில் கடுமையான இடையூறுகள் உண்டாகிறது, இதனால் மனம் மற்றும் உடலளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நபரின் உடலும் தனித்துவமானது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை, ஆனால் BDD உங்கள் உடல் மற்றும் தோற்றத்தில் குறைபாடுகள் உள்ளதென நம்பி அதையே சிந்தித்து கொண்டு மனநல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
வளர் இளம் பருவத்தில் BDD தொடங்குவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது, அதாவது 12 வயது தொடக்கம் முதல் மூன்றில் ஒரு பங்காக 18 வயதுக்கு உட்பட்ட நிலையில் BDDக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
முதல் நிலை உறவினருக்கு BDD இருந்தால், உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூளை அமைப்பு, வேதியியல் மாற்றங்களினால் BDD வரலாம், ஏனெனில் BDD உள்ளவர்களின் மூளைப்பகுதிகள் பெரும்பாலும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
குழந்தை பருவத்தில் கேலி கிண்டல்கள், புறக்கணிப்பு, துஷ்பிரயோகம் போன்ற காரணங்களினாலும் BDD வரலாம்.
அறிகுறிகள்
உங்கள் உடலில் குறையென நினைக்கும் ஒரு விஷயத்தை பற்றி சிந்திப்பதில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள், அது மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் கூட போகலாம், ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமே முதல் அறிகுறியாகும்.
உங்கள் தோற்றத்தை பற்றி அதிக நேரம் சிந்திப்பது, கண்ணாடியில் அதிக நேரம் செலவிடுதல், மற்றவர்களிடம் கருத்து கேட்பது போன்றவைகள்.
உங்கள் தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது
அடிக்கடி செல்பி எடுத்துக்கொண்டு அதில் எவ்வாறு இருக்கிறது என பார்த்துக் கொள்வது.
gabapsychiatrist
உடல் தோற்றத்தை மற்றவர்கள் கிண்டலடித்து விடுவார்கள் என பயந்து பதட்டம் கொள்வது
உடல் தோற்றம் குறித்து வெட்கப்படுவது, வெறுப்பாக உணர்வது.
உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்ள நினைப்பது
சமூக கூட்டங்களை தவிர்த்தல், பொது இடங்களுக்கு செல்ல பயப்படுவது.
தோற்றத்தை மாற்றுவதற்காக அழகு தொடர்பான அறுவைசிகிச்சைகள் செய்ய முடிவெடுப்பது, அதை அடிக்கடி செய்து தோற்றத்தை மாற்றிக்கொண்டே இருப்பது
BDD பாதிக்கப்பட்ட நபர்கள் பயம், பதட்டத்துடன் இருப்பார்கள், மனம் ஒரு நிலையில் இருக்காது, தன்னை தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், தன் தோற்றத்தை பற்றியே எதிர்மறையான எண்ணங்களுடன் இருப்பார்கள், இதனால் ஒவ்வொரு நாள் பொழுதையும் சாதாரணமாக கடந்துவிட முடியாது.
ILLUSTRATION: GABY D’ALESSANDRO
உங்களுடைய அறிகுறிகள், பேசும் தன்மை, வாழ்க்கைமுறை, மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்றவற்றைக் கொண்டே BDD யால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா இல்லையா என்பதை மருத்துவர் கண்டறிந்துவிடுவார்.
High or moderate, Low, No insight என மூன்று நிலைகள் இருந்தாலும் மருத்துவர்கள் உங்களுக்கேற்ற மனநல ஆலோசனைகளை வழங்குவார்கள்.
BDDயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும் சிகிச்சையளிக்கக்கூடிய ஒன்றே. பிசியோதெரபி மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.