மகன் படத்தை தான் கூறினாரா SAC? பெரிய அப்பா கேப்ஷனில் வலம் வரும் ப்ளூ சட்டை மாறன்
சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட SAC, தான் பார்த்த படம் ஒன்றை விமர்சித்து பேசியிருந்தார்.
தேசிங்கு ராஜா 2 படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.
அவர் குறிப்பிடுகையில், சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்... உடனே இயக்குநருக்கு போன் போட்டு முதல் பாதில் அருமையாக இருக்கிறது என பாராட்டினேன்.
அதனை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அந்த இயக்குநர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்றதும் அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்ததாக தெரிவித்தார்.
மேலும் "தகப்பனே தனது பிள்ளையை பலி கொடுக்க விரும்ப மாட்டார். கிறிஸ்துவ மதத்தில் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை என்றேன்.
உடனே அந்த இயக்குநர் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்... சாப்பிட்டு பேசுகிறேன் என சொல்லிவிட்டு எனது போனை கட் செய்துவிட்டார்.
அதன்பின் இப்போது வரை அந்த இயக்குநர் கால் பண்ணவில்லை. அந்தப் படம் வெளியான பின்னர் நான் சொன்ன அனைத்தையும் ரசிகர்கள் அப்படியே விமர்சித்தனர்... நல்ல வச்சு செஞ்சாங்க" என பேசியிருந்தார்.
இந்த நிலையில், “ப்ளூ சட்டை பெரியப்பா” என்ற கேப்ஷனில் எஸ்.ஏ.சந்திரசேகரின் குரலுக்கு ப்ளு சட்டை மாறனின் முகத்தை கொடுத்து ப்ளு சட்டை மாறன் பேசுவது போல் எடிட் செய்துள்ளனர்.
இந்த காணொளியை ப்ளு சட்டை மாறனும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களால் இப்படி ட்ரோல் செய்யப்படுவதற்கான அவசியம் இல்லை.
இயக்குநர் நினைத்திருந்தால் கண்டிப்பாக மாற்றியிருக்கலாம் எனவும் SAC உரையில் குறிப்பிட்டிருந்தார்.
Adei... https://t.co/zKNxbwiQ6A
— Blue Sattai Maran (@tamiltalkies) January 29, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |