தினேஷ்- விசித்ரா மீண்டும் மோதல்: புதிய நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு
புதிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் மற்றும் விசித்ரா சண்டை ஏற்பட்டதால் படப்பிடிப்பிலிருந்து விசித்ரா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் புதிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் தினேஷ் மற்றும் விசித்ராவும் அடங்குவர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவரும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டனர்.
உள்ளே இருந்த சூழ்நிலையால் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக விசித்ரா கூறினாலும் தற்போது வெளியில் வந்த இவர்கள் போர் தொடர்ந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் புதிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மோதலில் தினேஷ்- விசித்ரா
இந்த புதிய நிகழ்ச்சியின் போது விசித்ராவை தினேஷ் கிண்டல் செய்துள்ளாராம். அதனால் கோபமான விசித்திரா எனக்கு இந்த நிகழ்ச்சியே தேவை கிடையாது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தான் நான் இவருடைய பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இங்கே அப்படி கிடையாது என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
தினேஷுக்கும் விசித்திராவிற்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆகாது என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இருவரையும் வைத்து நிகழ்ச்சி பண்ணினால் டிஆர்பி அதிகரிக்கும் என்று பிரபல ரிவி மீண்டும் புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளதாகவும், அது பாதியிலேயே நின்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |